Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'என் அன்பு மிஷ்கின் சார்,,,' - லோகேஷ் கனகராஜ் சொன்ன செய்தி

    ‘என் அன்பு மிஷ்கின் சார்,,,’ – லோகேஷ் கனகராஜ் சொன்ன செய்தி

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மிஷ்கின் குறித்து பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    நடிகர் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் படம்தான், லியோ. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்யுடன், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ் மற்றும் மன்சூர் அலிகான் போன்றோர் நடித்து வருகின்றனர்.

    இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் இணையத்தில் வைரலாகின. ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் காஷ்மீர் செல்லும் வீடியோ சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவால் வெளியிடப்பட, அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. படப்பிடிப்பும் விறுவிறுப்பாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 

    இப்படத்தில் மிஷ்கின் தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் சென்னை திரும்பினார். இதனிடையே மிஷ்கின் லியோ படக்குழு குறித்து தெரிவித்திருந்தது இணையத்தில் வைரலானது. 

    மிஷ்கின் தெரிவித்ததாவது;

    minus 12 டிகிரியில் 500 பேர் கொண்ட Leo படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது.

    ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினார்கள். Assistant director-களின் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார்.

    என் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான், அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன்.

    என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன். Leo திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்.

    இவ்வாறு கூறினார். 

    இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ‘என் அன்பு மிஷ்கின் சார், உங்களுடன் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பிற்காகவும் அதிர்ஷ்டத்திற்காகவும் மில்லியன் முறை நன்றி சொன்னாலும் போதாது. நீங்கள் படக்குழுவில் இருந்தது முழு மகிழ்ச்சி. என்னால் போதுமான நன்றியை சொல்லவே முடியாது. இருந்தாலும் மில்லியன் நன்றி சார்” எனப் பதிவிட்டுள்ளார்.

    ஷாருக்கான் படத்தை தவிர்த்தாரா அல்லு அர்ஜூன்? – வெளிவந்த தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....