Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்நாகாலாந்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான ஹேக்கானி ஜக்காலு

    நாகாலாந்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான ஹேக்கானி ஜக்காலு

    நாகாலாந்து மாநிலத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான ஹேக்கானி ஜக்காலு, ஆணாதிக்க மனப்பான்மை மாறி வருவதாக தெரிவித்துள்ளார். 

    திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று வடகிழக்கு மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த பிப்ரவரி 27 அம தேதி நாகாலாந்து மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஏற்கனவே, ஆட்சியில் இருந்து வரும் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சி கூட்டணி தற்போது முன்னிலை வகித்து வருகிறது. 

    இதுவரை வந்துள்ள முன்னிலை மற்றும் முடிவு நிலவரப்படி, பாஜக கூட்டணி 17 இடங்களில் முன்னிலையும், 19 தொகுதிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியின் வேட்பாளரான ஹேக்கனி ஜக்காலு, முதன் முறையாக நாகாலாந்து சட்டமன்றத்தின் பெண் உறுப்பினராக மாறியுள்ளார். 

    48 வயதாகும் ஹேக்கானி ஜக்காலு அமெரிக்காவில் சட்டம் பயின்ற ஆவார். இவர் யூத் நெட் என்ற அமைப்பை உருவாக்கி கடந்த 20 ஆண்டுகளாக இளைஞர்களுக்கு கல்வி கற்பித்தல், வாழ்க்கைக்கான திறன்கள் உள்ளிட்டவற்றை பயிற்றுவித்து வருகிறார். இதுவே இவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. 

    தேர்தல் பிரச்சாரத்தில் இவர் ஈடுபடுகையில், “நாகாலாந்தில் உள்ள சமூகம் பெரும்பாலும் ஆணாதிக்க மனப்பான்மையை தான் கொண்டிருக்கும். அது இப்போது மாறி வருகிறது. இந்த மாறிய மனநிலை தேர்தலிலும் பிரதிபலிக்கும்”என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.   

    பாகிஸ்தானில் கடும் பஞ்சம்; வீரர்களுக்கே உணவில்லையென கடிதம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....