Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கண்டுபிடிக்கப்பட்ட 500 கிலோ எடையுள்ள வெடிகுண்டு; 3 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

    கண்டுபிடிக்கப்பட்ட 500 கிலோ எடையுள்ள வெடிகுண்டு; 3 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

    ஜெர்மனியில் 2 ஆம் உலகப்போர் குண்டு கண்டு பிடிக்கப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். 

    இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா ஜெர்மனி மீது ஏராளமான குண்டுகளை வீசியது. அதில் பல குண்டுகள் வெடிக்காமல் பூமிக்குள் புதையுண்டன. அப்படி வெடிக்காமல் புதைந்து கிடக்கும் குண்டுகள் அவ்வப்போது கண்டெடுக்கப்படுகின்றன. 

    இந்நிலையில், ஜெர்மனியின் மேற்கு பகுதியில் எசன் நகரில் புனரமைப்பு பணிகளுக்கான குழி தோண்டப்பட்டது. அப்போது அங்கு இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவால் வீசப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, ஜெர்மனி ராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அங்கு வந்து ஆய்வு செய்து மண்ணுக்கு அடியில் புதைந்து இருந்த வெடிகுண்டை அகற்றினர். 500 கிலோ எடை கொண்ட மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு என்பதால் அதனை பாதுகாப்புடன் செயலிழக்க வைக்க வெடிகுண்டு நிபுணர்கள் முயற்சித்து வருகின்றனர். 

    இதன் காரணமாக, எசன் மற்றும் ஓபர்ஹவுசன் ஆகிய 2 நகரங்களில் வசித்து வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 

    பிரதமராவே இருந்தாலும் தண்டனைதான்; பிரிட்டன் பிரதமருக்கு விதிக்கப்பட்ட அபராதம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....