Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு1200 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடராஜர் சிலை மீட்பு

    1200 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடராஜர் சிலை மீட்பு

    சென்னை அருகே 1200 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடராஜர் சிலை மீட்கப்பட்டுள்ளது.  

    கடந்த 2017-ம் ஆண்டு ஆழ்வார்பேட்டையில் வசித்து வந்த பெண் ஒருவர் ஒரு நடராஜர் சிலையை ஜெர்மனிக்கு கொண்டு செல்வதற்கு அனுமதிக் கேட்டு இந்திய தொல்லியல் துறையில் விண்ணப்பித்தார். ஆனால், இந்திய தொல்லியல் துறை அந்த நடராஜர் சிலையை கொண்டு செல்வதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. 

    இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் ஜெர்மனிக்குச் சென்றார். அதேநேரத்தில் அந்தப் பெண் ஜெர்மனிக்கு கொண்டு செல்ல முயன்ற தொன்மையான சிலை எங்குள்ளதென சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் விசாரணை செய்து வந்தனர். 

    இந்நிலையில், அந்தச் சிலை சென்னை அருகே மணலி சாத்தங்காட்டில் ஒரு உலோகப் பொருள்கள் விற்கும் கடையில் அந்த சிலை மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

    இதன் பிறகு, கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துணை ஆணையர் முத்து ராஜா தலைமையில் காவல்துறையினர் கடந்த ஜூலை 22-ம் தேதி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 அடி உயரமும் 1250 கிலோ எடையும் கொண்ட உலோகத்தினால் செய்யப்பட்ட நடராஜர் சிலையை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்தது.

    இந்தச் சம்பவம் குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியதாவது :

    சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான இந்த சிலை, சோழர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். மேலும், உலோகத்தால் செய்யப்பட்ட இந்த சிலையின் மேற்பகுதியில் ஐம்பொன்னால் பூச்சு உள்ளது. உலோகத்தால் செய்யப்பட்ட நடராஜர் சிலைகளில், இது மூன்றாவது பெரிய சிலையாகவும் இருக்கலாம்.

    இவ்வாறு தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    இந்நிலையில், தொல்லியல் ஆய்வாளர்களின் கூற்று உண்மையா என உறுதிப்படுத்துவதற்குரிய நடவடிக்கையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

    இந்தச் சம்பவம் குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளதாவது :

    தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடராஜர் சிலை, ஒரு கோயிலின் பீடத்தில் இருந்து அறுத்து எடுக்கப்பட்டதற்கான தடயங்கள் இருக்கிறது. மேலும், நடராஜர் சிலையை அந்தக் கடையின் உரிமையாளர் பார்த்திபனிடம் ஒரு பெண் ஒப்படைத்திருந்தார். பார்த்திபன் அந்தச் சிலையை வெளிநாடு அனுப்புவதற்கு கடந்த 2017-ஆம் ஆண்டு தொல்லியல் துறையின் சான்றிதழ் பெற முயற்சித்துள்ளார்.

    இந்நிலையில், கைப்பற்றப்பட்ட அந்த சிலை எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. அந்தச் சிலையின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.50 கோடிக்கு மேல் இருக்கும்.

    இவ்வாறு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த வாரம் உங்கள் ராசிக்கான பலன் பலித்ததா? துலாம் முதல் மீனம் வரை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....