Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வாரம் உங்கள் ராசிக்கான பலன் பலித்ததா? துலாம் முதல் மீனம் வரை

    இந்த வாரம் உங்கள் ராசிக்கான பலன் பலித்ததா? துலாம் முதல் மீனம் வரை

    துலாம்:

    உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அதனை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். உங்களிடம் கணிசமான தொகை காணப்படும். அதனை குடும்ப நலத்திற்காக செலவு செய்வீர்கள். உங்கள் துணையுடன் அலுவலகப் பயணம் ஒன்றைப் பற்றி ஆலோசிப்பீர்கள். முறையாக திட்டமிடுவதன் மூலம் இருவரும் சிறப்பான நேரத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வது உதவிகரமாக இருக்கும்.

    விருச்சிகம்:

    குடும்பத்தின் வளர்ச்சிக்கான செயல்களைத் தொடங்குவீர்கள். நீங்கள் நன்மையான பலன்கள் காண புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும். உங்கள் திறமைகளை சிறப்பாக பயன்படுத்தி உங்கள் பணியில் வெற்றி பெறுவீர்கள். சில தடைகளைச்  சந்தித்த பின் நிதிநிலைமையில் முன்னேற்றம் காணப்படும். பெரியவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி உறவை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் இருக்காது.

    தனுசு:

    உங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு பொதுவான இலக்கை நோக்கி செயல்பட வேண்டும். அறிவார்ந்த முறையில் பணி செய்தால் மட்டுமே வெற்றி காண இயலும். அதன் மூலம் நீங்கள் உங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள். பூர்வீகச் சொத்து மற்றும் பங்கு வர்த்தகத்தின் மூலம் பண வரவு ஏற்பட வாய்புள்ளது. இதனால், நிதி நிலைமை மகிழ்ச்சிகரமாக காணப்படும். உங்களின் இனிமையான மற்றும் ஊக்கமான வார்த்தைகள் உங்கள் துணையை திருப்தியடையச் செய்யும். இனிமையான தருணங்களை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் உறுதியான மனநிலை தேக ஆரோக்கியத்தை நன்கு பராமரிக்க உதவும்.

    மகரம்:

    நீங்கள் உங்களின் உண்மையான ஆற்றலை அறிந்து கொள்வீர்கள். உங்களின் தகவல் தொடர்பு திறமைக்கான பாராட்டைப் பெறுவீர்கள். நீங்கள் திறமையாக பணியாற்றுவீர்கள். உங்களிடம் காணப்படும் உறுதி உங்களின் வெற்றிக்கு உதவும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். நீங்கள் பணத்தை சிறப்பாக கையாளுவீர்கள்.
    உங்கள் துணையுடன் நல்லுறவு கொள்வீர்கள். உங்கள் நடத்தையின் மூலம் உங்கள் துணையை மகிழ்விப்பீர்கள். உங்களின் நம்பிக்கையான மனநிலை காரணமாக நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

    கும்பம்:

    உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியைப் பெற்றுத் தரும். நீங்கள் அதிக பலன்களை காண்பீர்கள். உங்கள் பணிகளை விரைவாகவும் எளிதாகவும் முடிப்பீர்கள். உங்களுக்குள் இருக்கும் திறமையின் மூலம் இது சாத்தியம். இது உங்களுக்கு நன்மை அளிக்கும். அதிக அளவில் பணம் காணப்படும். உங்கள் வங்கியிருப்பு உயரும். இது உங்களுக்கு திருப்தி அளிக்கும். உங்கள் துணையுடன் இனிமையான நேரத்தை பகிர்ந்து மகிழ்வீர்கள். குடும்பத்தின் பல விஷயங்களை உங்கள் துணையுடன் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும். எனவே, உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    மீனம்:

    உங்கள் வழக்கமான பணிகளை கவனமாக முறையாக கையாள வேண்டும். ஆன்மீக நிகழ்சிகளில் ஈடுபவது நல்ல பலனை அளிக்கும். பணியில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். புதிய வேலைவாய்ப்புகள் சாத்தியம். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். பணப்புழக்கம் மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். உங்கள் துணையுடன் நன்றாகப் பேசி நட்புணர்வுடன் இருக்க வேண்டும். உறவில் நல்லிணக்கத்தை பராமரிக்க இது அவசியம். நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். திடமான உடல்நலத்தை பராமரிப்பீர்கள்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....