Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வாரம் உங்கள் ராசிக்கான பலன் பலித்ததா?- மேஷம் முதல் கன்னி வரை

    இந்த வாரம் உங்கள் ராசிக்கான பலன் பலித்ததா?- மேஷம் முதல் கன்னி வரை

    மேஷம்:

    உங்களின் நிஜ ஆற்றலை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். உங்கள் இலக்குளை நிர்ணயித்து அதனை அடைய செயலாற்றுங்கள். நீங்கள் கடினமாக பணியாற்றி உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள். உங்கள் சமயோசித புத்திக்கு பாராட்டு கிடைக்கும். உங்களின் தேவையின் போது உங்களுக்கு பணம் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் உங்களுக்கு லாபம் அளிக்கும். உங்கள் துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் மகிழ்ச்சி காண்பீர்கள். உங்களிடம் ஆற்றலும் உற்சாகமும் நிறைந்து காணப்படும். இதனால், உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    ரிஷபம்:

    உங்களிடம் ஆற்றலும் உறுதியும் நிறைந்து காணப்படும். அதனால், நீங்கள் நல்ல மனநிலையில் இருப்பீர்கள். நீங்கள் எந்த முடிவெடுத்தாலும் அது உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பு உள்ளது. இது உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும். நீங்கள் பணம் சேமிப்பீர்கள். ஊக்கத் தொகை வகையில் பண வரவு காணப்படும். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இதனால், நல்ல புரிந்துணர்வு காணப்படும். நீங்கள் பூரண ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

    மிதுனம்:

    ஆன்மீக நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகளில் பங்கு கொள்வது நல்லது. நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை அளிக்கும். பணியைப் பொறுத்தவரை சிறப்பான நிலை காணப்படும். மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். உங்கள் சேமிப்பு நிலை உயரும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு கொண்டிருப்பீர்கள். அன்பு பெருகி காணப்படும். இருவரும் ஒன்றாக இணைந்து மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    கடகம்:

    உங்கள் உறுதியும் தைரியமும் நல்ல விளைவுகளை உருவாக்கும். திறமையான தகவல் பரிமாற்றத்தின் மூலம் நீங்கள் மிகுந்த பலனடைவீர்கள். பணியில் உங்கள் திறமைகளைக் காட்டுவீர்கள். ஆர்வத்துடன் பணியாற்றுவீர்கள். உங்கள் செயலுக்காக பாராட்டைப் பெறுவீர்கள். அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் பணத்தை சேமிப்பீர்கள். உங்கள் தாய் தந்தையரிடம் நல்லுறவு கொண்டிருப்பீர்கள். உங்கள் காதல் வாழ்க்கைக்கு பெற்றோரிடம் ஆலோசனை கேட்பது நல்லது. உங்களின் தன்னம்பிக்கையால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    சிம்மம்:

    தெய்வீகப் பாடல்கள் கேட்பது மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது மகிழ்ச்சி அளிக்கும். வேலையில் பிரகாசிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது. உங்கள் திறமைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்களின் கடின உழைப்பால் நீங்கள் கணிசமாக பணம் சம்பாதிக்க முடியும். நிதிநிலைமை நல்ல முறையில் இருக்கும். அன்யோன்யமும் அன்பும் அதிகமாக காணப்படும். உங்கள் துணையிடம் அன்பான உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். உங்களின் மகிழ்ச்சியான மனப்பான்மை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

    கன்னி:

    நீங்கள் வளர்ச்சி நோக்கி முன்னேறுவீர்கள். திட்டமிட்டு தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் வெற்றிக் காணலாம்.உங்கள் பணியில் பெயரும் புகழும் பெறுவீர்கள். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். உங்கள் தரத்தை உயர்த்துவதற்கு சேமிப்பு நிலையை சிறப்பாக பராமரிப்பீர்கள். உங்கள் துணையுடன் அன்பாகப் பழகுவதன் மூலம் நல்லிணக்கம் ஏற்படும். இதனால், இருவரும் பரஸ்பரம் மகிழ்ச்சி கொள்வீர்கள். நீங்கள் சிறந்த தேக ஆரோக்கியத்தைப் பராமரிப்பீர்கள்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....