Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதில்லி: ரயில்வே நிலையத்தில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

    தில்லி: ரயில்வே நிலையத்தில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

    தில்லி ரயில் நிலையத்தில், பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு 14 நாள்கள் நீதிமன்றக்காவல் பிறப்பித்து தில்லியில் உள்ள உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

    தில்லி ரயில் நிலையத்தில், கடந்த ஜூலை 21-ம் தேதி மின்விளக்கு அறையில் ரயில்வே ஊழியர்கள் இரண்டு பேர் 30 வயதுமிக்க பெண்ணை பாலியல் வண்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டுபேர் அந்த அறைக்கு வெளியே காவலுக்கு நின்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே துணை காவல் ஆணையர் ஹரேந்திர சிங் தெரிவித்துள்ளதாவது :

    எங்களுக்கு, கடந்த ஜூலை 22-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் ஒரு கைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பெண் ஒருவர் இரு ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்ததில், ரயில்வே நிலையத்தில் உள்ள மின்விளக்கு அறையில் பாலியல் வன்கொடுமை நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

    மேலும், புகார் அளித்த பெண் தனது கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டாக அந்தப் பெண்ணின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, குற்றம் சுமத்தப்பட்ட நான்கு நபர்களில் ஒருவருடன் நட்பு ரீதியில் பழகிவந்துள்ளார். அந்த நபர், இப்பெண்ணுக்கு ரயில்வே துறையில் பணிப்பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ளார். 

    இந்நிலையில், கடந்த ஜூலை 21-ம் தேதி இருவரும் கைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த போது, அந்த நபர் இப்பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். அழைப்புக்குக் காரணமாக தனது மகனுக்கு பிறந்தநாள் மற்றும் புது வீடு வாங்கியதற்கான விழா என்று தெரிவித்துள்ளார். 

    இதைத் தொடர்ந்து, இப்பெண்ணை கீர்த்தி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.30 மணியளவில் ரயில் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளார். மின்விளக்கு அறையில் அமர செய்துவிட்டு சென்ற அந்த நபர் மீண்டும் வரும்போது தன்னுடன் இன்னொருவரையும் அழைத்து வந்துள்ளார். 

    இதன்பிறகு, அந்த இரு நபர்களால் அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மேலும், இரு நபர்கள் அறைக்கு வெளியில் காவலுக்கு நின்றுள்ளார்கள்.

    இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்தப் புகாரின் பெயரில், அடுத்த 2 மணி நேரத்தில் சதீஷ்குமார் (35), வினோத் குமார் (38), மங்கள் சந்த் மீனா (33) மற்றும் ஜெகதீஷ் சந்த் (37) ஆகியோரை நாங்கள் கைது செய்தோம். 

    இவ்வாறு ரயில்வே துணை காவல் ஆணையர் ஹரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், தில்லியில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்ட நான்கு பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து தில்லி நீதிமன்றம் நான்கு பேருக்கும் 14 நாள்கள் நீதிமன்றக்காவல் பிறப்பித்து உத்தரவிட்டது. 

    திருமணமாகாத பெண்ணும் இனி கருவைக் கலைக்கலாம்- உச்சநீதிமன்றம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....