Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்; விசாரணையில் புது திருப்பம்!

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்; விசாரணையில் புது திருப்பம்!

    புனேவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திருப்பு முனையாக அவர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    ஜனவரி 18 ஆம் தேதி புனேவில் இருக்கும் என்ற பரகான் என்ற கிராமத்திற்கு அருகே இருக்கும் பீமா ஆற்றில் மனித உடல் ஒன்று மிதப்பதாக புனே காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். 4 நாட்களாக தொடர்ந்து தீவிர சோதனை நடத்தப்பட்டதில், அங்கிருந்து மேலும் 6 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 

    அந்த உடல்கள் அனைத்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், கண்டெடுக்கப்பட்ட இறந்தவர்களின் ஒருவரது உடலில் இருந்து செல்போன் இருந்ததால் அதனை வைத்து அனைவரையும் அடையாளம் காண முடிந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முதலில் இந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் தற்கொலையாக கருதிய நிலையில், உயிரிழந்த 50 வயது நபரின் உறவினர்கள் 4 பேர் கொலை குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். 

    தற்போது கைது செய்யப்பட்டுள்ள 4 பேரில் ஒருவரின் மகன் சில மாதங்களுக்கு முன்பாக சாலை விபத்தில் உயிரிழந்ததாகவும் ஆனால், அது சாலை விபத்து இல்லை என்றும் தனது உறவினர் தான் கொலை செய்து விட்டதாகவும் அவர் நினைத்தார். இதன் காரணமாக அந்த நபர் தனது 3 சகோதரர்களுடன் சேர்ந்து திட்டம் வகுத்து மொத்த குடும்பத்தையும் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 பேரும் ஜனவரி 18 ஆம் தேதி 50 வயது நபர், அவரது மனைவி, மகளும் மருமகனும் இவர்களது மூன்று பேரப்பிள்ளைகளையும் பீமா ஆற்றில் தள்ளி கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மசாலா கலந்த ஓவியத்தை வரைந்து சாதனை; சென்னையை சேர்ந்த கலைஞர் அசத்தல் சாதனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....