Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு7 மாதங்களில் சுமார் 105 லிட்டர் தாய்ப்பால் தானம்! கோவை பெண் சாதனை

    7 மாதங்களில் சுமார் 105 லிட்டர் தாய்ப்பால் தானம்! கோவை பெண் சாதனை

    7 மாதங்களில் சுமார் 105 லிட்டர் தாய்ப்பால் தானமாக கொடுத்து கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். 

    கோவை மாவட்டம், வடவள்ளி பகுதியில் இருக்கும் பி.என்.புதூரைச் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா. இந்தப் பெண்ணுக்கு வயது 27. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவருக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அதே சமயம், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு பெண் குழந்தையை பெற்று எடுத்தார். 

    இந்நிலையில், அவருக்கு சுரக்கும் தாய்ப்பாலை தனது குழந்தைக்குப்போக மீதம் இருப்பதை கோவை அரசு மருத்துவமனைக்கு தானமாக கொடுத்து வருகிறார். 

    தொடர்ந்து இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 7 மாதங்களாக சுமார் 105 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கி உள்ளார். இதன் காரணமாக இவர், ‘ஆசியன் புக் ஆப் ரெகார்ட்ஸ்’ மற்றும் ‘இந்தியன் புக் ஆப் ரெகார்ட்ஸ்’ ஆகிய சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளார். 

    ஸ்ரீதிவ்யாவின் தாய்ப்பால் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கவழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர். 

    ‘தளபதி 67’ குறித்து அப்டேட் சொன்ன இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....