Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ரஷ்யாவை விட்டு வெளியேறும் நோக்கியா : ரஷ்யாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?

    ரஷ்யாவை விட்டு வெளியேறும் நோக்கியா : ரஷ்யாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?

    உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா நிறுவனம், ரஷ்ய மார்க்கெட்டில் இருந்து விலகிக் கொண்டது. அந்த நிர்வாகத்தின் நிர்வாக அதிகாரி நோக்கியா நிறுவனத்தின் போட்டியாளரான எரிக்சன் நிறுவனத்தை விட ஒரு படி மேலே சென்று ரஷ்யாவில் காலவரையின்றி தனது வணிகத்தை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது. 

    நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து போர்த்தொடுத்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். உக்ரைன் நாட்டில் இதனால் கடும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் துயரப்பட்டு வருகின்றனர். 

    இதனால் மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் விளைவாக பல நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறி வருகின்றன. ஆனாலும், தொலைத்தொடர்பு போன்ற ஒரு சில சேவைகளுக்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் பொருளாதாரத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் வேறு வழியில்லை எனக்கூறி ரஷ்யாவில் இருந்து வணிகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது நோக்கியா நிறுவனம். 

    இப்பொழுது இருக்கும் நிலையில் ரஷ்யாவில் வணிகத்தைத் தொடர்வதற்கான எவ்வித சாத்தியக்கூறுகளும் இல்லை என்று கூறியுள்ளார் நோக்கியா நிர்வாகத்தின் நிர்வாக அதிகாரி பெக்கா லுண்ட்மார்க். தங்களுடைய பயனாளர்களை தொடர்ந்து ஆதரிப்பதாக கூறிய அந்நிறுவனம் , மீண்டும் எப்பொழுது வணிகத்தை தொடருவோம் என இப்பொழுது அறிவிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது. 

    தற்பொழுது உள்ள வாடிக்கையாளர்களை தொடர்ந்து ஆதரிக்க, நோக்கியா நிறுவனம், நோக்கியா சார்ந்த உரிமங்களை தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. நோக்கியா மற்றும் எரிக்சன் என இந்த இரண்டு நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்களுடைய ஒற்றை இலக்க விற்பனையைத் தொடங்கின. அதற்கு முன்பு அங்கு சீன நிறுவங்களான ஹவாய் மற்றும் இசட்டிஈ (ZTE) ஆகிய நிறுவனங்கள் தான் முன்னணியில் இருந்தன. 

    ஆரம்பத்தில் நோக்கியா அங்குள்ள சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஆண்டின் இறுதியில் சுமார் 830 கோடி தாக்கத்தை அது ஏற்படுத்தி இருந்தது. நோக்கியா மற்றும் எரிக்சனின் தாய் நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் நேட்டோ அமைப்பில் சேர முடிவு செய்திருந்தன. இதுவும், ரஷ்யாவுடன் முரண்பாடு ஏற்பட ஒரு முக்கிய காரணம் ஆகும்.

    ரஷ்யாவும் தன் நாட்டு நிறுவனங்களை ரஷ்ய உபகரணங்களை மட்டுமே பயன்படுத்தி தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை தயாரிக்க வலியுறுத்தி வருகிறது. இதன் மூலம் நோக்கியா மற்றும் எரிக்சன் நிறுவனங்களின் வெளியேறுதலை ஈடுகட்ட முடியும் என ரஷ்யா நம்புகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....