சென்னை: சென்னையில் 77-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகிறது.
அதன் அடிப்படையில், கடந்த 76 நாள்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இன்றி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102 ரூபாய் 63 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 77-வது நாளாக இன்றும் (ஆகஸ்ட் 6) பெட்ரோல் , டீசல் விலையில் மாற்றம் இல்லை. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102 ரூபாய் 63 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனையாகிறது.
‘இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லை’- ராகுல் காந்தி