Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லை'- ராகுல் காந்தி

    ‘இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லை’- ராகுல் காந்தி

    ‘சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லை’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

    புது தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

    அப்போது, அவர் கூறியதாவது: 

    சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லை. 

    நாம் ஜனநாயகத்தின் மரணத்தை பார்த்து கொண்டிருக்கிறோம். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தொடங்கி செங்கல் செங்கலாக கட்டப்பட்ட இந்தியா, உங்கள் கண்முன்னே அழிந்து கொண்டிருக்கிறது. 

    மக்களின் பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், வன்முறை போன்றவை எழுப்பிடக் கூடாது என்பதே அவர்களது (பாஜக) திட்டம். இந்தியாவில் இருக்கும் இரண்டு, மூன்று பணக்காரர்களுக்கு மட்டுமே இந்த சர்வாதிகார ஆட்சி நடத்தப்படுகிறது. 

    ஆர்.எஸ்.எஸ்-சின் கருத்தை எதிர்ப்பதே எனது வேலை. அதை நான் தொடர்ந்து  செய்யப் போகிறேன். எவ்வளவு அதிகமாக எதிர்க்கின்றேனோ, அவ்வளவு அதிகமாக நான் தாக்கப்படுவேன், நான் கடுமையாகத் தாக்கப்படுவேன். ஆனாலும், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னைத் தாக்குங்கள்’

    இவ்வாறு, அவர் பேட்டியளித்தார்.

    ‘பிரதமர் மோடியைக் கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம்’ – ராகுல் காந்தி பேச்சு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....