Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇரண்டரை வருடங்களில் லட்சக்கணக்கில் இந்தியர்கள் வெளிநாட்டுக்கு பயணம் - காரணம் என்ன?

    இரண்டரை வருடங்களில் லட்சக்கணக்கில் இந்தியர்கள் வெளிநாட்டுக்கு பயணம் – காரணம் என்ன?

    2020-ம் ஆண்டு ஜனவரி முதல் 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை வெளிநாடுகளுக்கு வேலைக்காக 28 லட்சம் பேர் சென்றிருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

    குடியுரிமை சோதனை அவசியமான நாடுகளுக்கு மட்டும் சுமார் 4.16 லட்சம் இந்தியர்கள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றச் சென்றிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

    மக்களவையில் வெளிநாடுகளில் பணியாற்றுபவர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு மத்திய வெளியுறவு விவகாரத் துறை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பணி அல்லது வேலை கிடைத்து வெளிநாடு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையை அறிய குறிப்பிட்டுச் சொல்லும் எந்த தொழில்நுட்பமும் இப்போது இல்லை. 

    மேலும், வெளிநாடு செல்லும் இந்தியர்கள், தங்கள் விமான பயணத்தின் போது வாய்மொழியாகக் கூறும் தகவல் மூலமாகவே, இந்த விவரம் தொகுக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தொகுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின் அடிப்படையில், 2020-ம் ஆண்டு 7.15 லட்சம் இந்தியர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர். 2021-ம் ஆண்டு 8.33 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 13.02 லட்சம் பேர் வெளிநாடு சென்றிருப்பதாகவும் இந்த புள்ளிவிவரத்தின் வாயிலாக அறியமுடிகிறது.

    குரங்கம்மை நோய் எதிரொலி; பொது சுகாதார அவசர நிலையை அறிவித்த அமெரிக்கா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....