Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்குரங்கம்மை நோய் எதிரொலி; பொது சுகாதார அவசர நிலையை அறிவித்த அமெரிக்கா

    குரங்கம்மை நோய் எதிரொலி; பொது சுகாதார அவசர நிலையை அறிவித்த அமெரிக்கா

    குரங்கம்மை நோயை பொது சுகாதார அவசர நிலையாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

    குரங்கம்மை நோய் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதனால், உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 

    இந்நிலையில்,  குரங்கம்மை நோய் அமெரிக்காவில் அதிகமாக பரவியிருப்பதால், அந்நாட்டின் மாகாணங்கள் ஒன்றின் பின் ஒன்றாக அவசர நிலையை அறிவித்து வந்தன. 

    மேலும் நியூயார்க், இல்லினாய்ஸ் ஆகிய மாகாணங்களை தொடர்ந்து கலிபோர்னியா மாகாணமும் அவசர நிலையை பிரகடனம் செய்தது.

    இதைத்தொடர்ந்து, அமெரிக்கா குரங்கம்மை நோயை பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது. 

    இதுகுறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘குரங்கம்மை நோய்க்கான தடுப்பூசி விநியோகத்தை மேம்படுத்துதல், பரிசோதனைகளை விரிவுபடுத்துதல் மற்றும் ஆபத்தில் உள்ள சமூகங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் நான் உறுதியாக உள்ளேன். 

    அதனால் தான், இந்த வைரஸ் வெடிப்பை அவசரமாக எதிர்கொள்ளவது மிக முக்கியம் என்று கருதி பொது சுகாதார அவசர நிலை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.

    மாடுகளுக்கு பரவும் நோய்; ஆயிரக்கணக்கான மாடுகள் உயிரிழப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....