Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமாடுகளுக்கு பரவும் நோய்; ஆயிரக்கணக்கான மாடுகள் உயிரிழப்பு

    மாடுகளுக்கு பரவும் நோய்; ஆயிரக்கணக்கான மாடுகள் உயிரிழப்பு

    ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தில் மாடுகளுக்கு தோல் கட்டி நோய் வேகமாக பரவி வருகிறது. 

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்களில் மாடுகளுக்கு தோல் கட்டி நோய் வேகமாக பரவி வருகிறது. அம்மாநிலத்தில் மாட்டின் தோலில் கட்டி உருவாகி மாடுகள் இறக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. மேலும், இதுவரையில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மாடுகள் கடந்த சில மாதங்களில் உயிரிழந்தன.

    இந்நிலையில், நோயை கட்டுப்படுத்த மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். மேலும், மாடுகளுக்கு வரும் தோல் கட்டி நோயை கட்டுப்படுத்த மத்திய அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என்றும் ராஜஸ்தான் முதல்வர் கேட்டுக்கொண்டார். 

    இந்த நோயால், ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகமாக பசு மாடுகள் தான் உயிரிழந்து வருகின்றன. இதனால், பால் உற்பத்தியானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மட்டுமல்லாது குஜராத்திலும் இந்நோய் 22 மாவட்டங்களில் பரவி உள்ளது.

    மேலும், கடந்த சில மாதங்களில் இந்த நோய்க்கு 1800-க்கும் அதிகமான பசு மாடுகள் குஜராத்தில் உயிரிழந்துவிட்டன. அதோடு, 70 ஆயிரத்திற்கும் அதிகமான மாடுகள் தற்போது இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. நோய் பரவலை தாமதமாகவே தெரிந்து கொண்ட மாநில அரசு, நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. 

    இதைத் தொடர்ந்து, இதுவரை 15 லட்சத்திற்கும் அதிகமான மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநில கால்நடைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் பகுதிதான், இந்நோயால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தேவையான தடுப்பூசிக்கு அகமதாபாத் நிறுவனம் ஒன்றுடன் மாநில அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 

    குஜராத் கட்ச் பகுதியில், மாநில முதல்வர் புபேந்தர பட்டேல் நிலைமையை நேரில் பார்வையிட்டார். இப்பகுதியில் மட்டும் 40 ஆயிரம் மாடுகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நோய், காரணமாக குஜராத்தில் தினமும் 50 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    ‘இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லை’- ராகுல் காந்தி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....