Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்துரை வைகோவின் பார்வையில் விஜய் சேதுபதியின் மாமனிதன் எப்படி இருக்கு?

    துரை வைகோவின் பார்வையில் விஜய் சேதுபதியின் மாமனிதன் எப்படி இருக்கு?

    விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படத்தைப் பார்த்த மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ இத்திரைப்படத்தை உன்னத படைப்பு என்று அடையாளப் படுத்தியுள்ளார். 

    இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம்தான், மாமனிதன். விஜய் சேதுபதியும், இயக்குனர் சீனு ராமசாமியும் இணையும் படங்களுக்கு என பொது ரசிகர்கள் மட்டும் அல்லாது பிரத்யேக ரசிகர்களும் இருக்கின்றனர். இவர்கள், இருவர் கூட்டணியில் இதுவரை வெளிவந்த தென்மேற்கு பருவ காற்று, தர்மதுரை போன்ற படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

    இதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி ‘மாமனிதன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். மேலும், இத்திரைப்படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது, இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

    இந்நிலையில், மாமனிதன் திரைப்படத்தைப் பார்த்த மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, இத்திரைப்படத்தை உன்னத படைப்பு என்று அடையாளப் படுத்தியுள்ளார். 

    மேலும், அவர் தெரிவித்துள்ளதாவது : 

    எளிய மனிதர்களின் வாழ்வியலை நுட்பமாக காட்சிப்படுத்துவதில் அபார திறமை பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள். அவர் இயக்கிய ‘மாமனிதன்’ திரைப்படத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.

    வணிக நோக்கத்தை மட்டுமே மையமாகக் கொண்டு பெரும்பாலான திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில், கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை அழகாக தனது ‘மாமனிதன்’ திரைக் காவியத்தின் மூலம் நண்பர் சீனு ராமசாமி அவர்கள் காட்சிப்படுத்தி இருக்கின்றார்.

    ஒரு எளிய மனிதராக இருக்கும் திரைப்படத்தின் நாயகன் விஜய் சேதுபதி, எப்படி மாமனிதனாக உயர்ந்து நிற்கிறார் என்பதே திரைப்படத்தின் கதை.

    ‘படிப்பை மட்டும் விட்றாத’ என்ற செய்தி கதை முழுவதும் நம் காதுகளில் விழுந்து கொண்டே இருக்கிறது. நேர்மையான மனிதர்கள் சூழ்நிலைக் காரணமாக ஏமாற்றுக்காரர்கள் ஆக்கப்பட்டாலும், மனசாட்சிக்கு உட்பட்டு அவர்களின் வாழ்க்கை நேர்மையாகவே நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை ‘மாமனிதன்’ நமக்கு உணர்த்துகிறது.

    பல இடங்களில், அழுத்தமான செய்திகளை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் நண்பர் சீனு ராமசாமி. சில இடங்களில் நம்மை அறியாமல் கண் கலங்கவும் வைத்திருக்கிறார்.

    இப்படத்தில் நடித்த அனைவரும் தாங்கள் ஏற்று நடித்த பாத்திரங்களில் சிறப்பாக தங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நடிகர் விஜய் சேதுபதிக்கு இது முக்கியமான படம். சாமானியராக நடித்து மக்களிடம் கலக்கும் ஆற்றல் என்பது அபரிமிதமானது. மாமனிதன் திரைப்படம், திரைப்பட விருதுகள் நிறைய பெற்று கலை உலகத்திற்கு பெருமை சேர்க்கும் என்று ஆழமாக நம்புகிறேன்.

    நண்பர் சீனு ராமசாமி ஆர்ப்பாட்டம் இல்லாத சிறந்த படைப்பாளி. எப்போதும் அவரது படைப்புகளில் எளிய மனிதர்களின் மீதான அன்பு இழையோடி இருக்கும்.

    மாமனிதனிலும் சாதித்து இருக்கிறார். அவருக்கு என் அன்பும், வாழ்த்துகளும்..!

    இவ்வாறாக அவர் தெரிவித்துள்ளார். 

    சோர்ந்த மனதை தேற்ற யுவன் பாடிய பாடல்; வாழ்வு என்பது இவ்வளவுதான்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....