Thursday, May 2, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புகுரூப் சி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

    குரூப் சி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

    குரூப் சி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

    இந்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களுக்குக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தேசிய தொழில் நுட்ப நிறுவனம் (National Institute of Fashion Technology) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அறவிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பணிக்கும் தனிதனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • வணிகவியல் பிரிவில் இளநிலைப் பட்டத்துடன், 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் 
    • ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டத்துடன் நிர்வாகவியல் பிரிவில் அனுபவம் பெற்றிருப்பதுடன், ஆங்கிலம் மற்றும் இந்தியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவர்கள் 
    • இளநிலைப் பட்டத்துடன், சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதவும், நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும், இரண்டு ஆண்டு அனுபவம் பெற்றவர்கள் 
    • செவிலியர் பிரிவில் பட்டம் பெற்றவர்கள்
    • பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள், இந்தியில் 25 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன், நூலகப் பிரிவில் பட்டம், அனுபவம் பெற்றவர்கள்
    • டர்னர், பிட்டர், மெஷினிஸ்ட், உற்பத்தி டெக்னீசியன் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் 
    • கைத்தறி மற்றும் ஜவுளி தொழில்நுட்பம் ஜவுளி வடிவமைப்பு துறையில் டிப்ளமோ, தகவல் தொழில்நுட்பம் டிப்ளமோ முடித்தவர்கள் 

    மேற்கண்ட தகுதிகளை உடையோர் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

    மேலும், இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது 27-க்குள் இருக்க வேண்டும் என்றும், எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.295 விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை தேசிய தொழில் நுட்ப நிறுவனம், காந்திநகர் (National Institute of Fashion Technology, Gandhinagar) என்ற முகவரிக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து, டி.டி.யின் பின்புறம் பெயர், முகவரி மற்றும் பணியின் பெயரைக் குறிப்பிடவும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

    https://www.nift.ac.in/gandhinagar/careers என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன், சுய சான்றொப்பம் செய்தத் தேவையான சான்றிதழ்களின் நகல்கள், பயோ-டேட்டா மற்றும் டி.டி.யை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் 13.08.2022 ஆகும். 

    மீன்வளத்துறையில் இவ்வளவு காலிப்பணியிடங்களா? டிகிரி முடித்தவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....