Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகள்ள நோட்டுகள் அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா? - நிதியமைச்சகம் விளக்கம்

    கள்ள நோட்டுகள் அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா? – நிதியமைச்சகம் விளக்கம்

    வங்கிகளில் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்படுவது வெகுவாகக் குறைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

    நாட்டில் பணமதிப்பிழப்பு கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு, கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்படுவது அதிகரித்துள்ளதா? என மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்திரி பதில் அளித்துள்ளார். 

    அண்டை நாடுகளில் இருந்து நாட்டுக்குள் கள்ள நோட்டுகள் கடத்தி கொண்டு வரப்படும் சம்பவங்கள் நடந்திருப்பதாக புலனாய்வுத் துறை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வெளியிடங்களில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள போதிலும்,  வங்கிப் பணிகளின்போது கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்படுவது குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், 2016-2017-ம் நிதியாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் எண்ணிக்கை 7.26 லட்சமாக இருந்த நிலையில், இது 2022-2021-ம் நிதியாண்டில் 2.08 லட்சம் நோட்டுகளாகக் குறைந்துள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    2-ம் உலகப் போரின் வெடிகுண்டு 70 ஆண்டுகளுக்கு பிறகு கண்டெடுப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....