Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉதய்பூர் கொலை காணொளி திட்டமிட்டே பகிரப்பட்டது - என்ஐஏ தகவல்

    உதய்பூர் கொலை காணொளி திட்டமிட்டே பகிரப்பட்டது – என்ஐஏ தகவல்

    உதய்பூர் கொலைத் தொடர்பாக சமூக வலைதளங்களில் உலவி வந்த காணொளி மக்களிடையே மத அடிப்படையில் பகைமையை தூண்டுவதற்காக பகிரப்பட்டது என்று என்ஐஏ தெரிவித்துள்ளது. 

    உதய்பூரில் ஜூன் 28ம் தேதி கன்ஹையா லால் எனப்படும் 48 வயதுமிக்க தையல்காரர் இரண்டு இஸ்லாமியர்களால் கொல்லப்பட்டார். கன்ஹையா லாலை கொலை செய்துவிட்டு அந்த இருவரும் காணொளி எடுத்தனர். அக்காணொளியில் கன்ஹையா லால் சாஹு என்ற தையல்காரரை தாங்கள் கொன்றதாக ஒப்புக்கொண்டனர். 

    மேலும், ‘’முகமது நபியை இழிவுபடுத்துபவர்களுக்கு இந்த தண்டனைதான் கிடைக்கும்” என்று அவர்கள் கூறிய அந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. 

    நூபுர் ஷர்மா தொலைகாட்சியில் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதுக்காக கன்ஹையா லாலை கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 

    கொலைக்குக் காரணமான பில்வாராவைச் சேர்ந்த 38 வயதான ரியாஸ் அத்தாரி மற்றும் 39 வயதான கெளஸ் முகமது ஆகிய இருவரையும் ராஜஸ்தான் காவல்துறை கொலை நிகழ்ந்த அன்றே கைது செய்தது. தற்போது, இருவரையும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. 

    இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை, கொலையாளிகள் இருவரும் வெளியிட்ட காணொளி குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, மக்களிடையே மத அடிப்படையில் பகைமையை தூண்டுவதற்காக திட்டமிட்டே சமூக வலைதளங்களில் அந்த காணொளி பகிரப்பட்டுள்ளது என்று தேசிய புலனாய்வு  மையம் தெரிவித்துள்ளது. 

    இந்தியா-மியான்மர் எல்லையில் இரு தமிழர்கள் சுட்டுக் கொலை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....