Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்புகையிலை தொடர்பாக நியூசிலாந்தின் புதிய சட்டம்...ஆச்சரியத்தில் உலக நாடுகள்!

    புகையிலை தொடர்பாக நியூசிலாந்தின் புதிய சட்டம்…ஆச்சரியத்தில் உலக நாடுகள்!

    நியூசிலாந்தில் ஜனவரி 1, 2009 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகையிலை விற்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    உலக நாடுகளின் கவனத்தை ஒரே ஒரு சட்டத்தின் மூலம் நியூசிலாந்து தன் பக்கம் திருப்பியுள்ளது. நியூசிலாந்து நாடானது ‘புகைப்பிடிக்காத நாடு’ என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. இந்த இலக்கை அடைய பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு செயல்படுத்தி வருகிறது. 

    இந்நிலையில்தான், நேற்று ‘புகைப்பிடிக்காத நாடு’ என்ற இலக்கை அடைய ஏதுவாக ஒரு புதிய சட்டத்தை நியூசிலாந்து அரசு அமல்படுத்தியுள்ளது. அந்தச் சட்டத்தின்படி, நியூசிலாந்தில் இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கு வாழ்நாள்தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சட்டமானது, ஜனவரி 1, 2009 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகையிலை விற்கக் கூடாது என்று தெரிவிக்கிறது. மேலும், இந்த சட்டத்தின் மூலம் அதாவது, நியூசிலாந்தில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு பிறகு சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 63 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    மேலும், இந்தத் திட்டத்தின்படி புகையிலைகளை விற்கும் விற்பனையாளர்களின் எண்ணிக்கையை சுமார் 6,000-இல் இருந்து 600 ஆக குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் இந்த சட்டமானது உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    விஜய்யின் வாரிசு திரைப்படத்தை முந்துகிறதா அஜித்தின் துணிவு? – வெளிவந்த ரிப்போர்ட்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....