Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அமைச்சராக பதவி ஏற்ற உதயநிதிக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் வாழ்த்து!

    அமைச்சராக பதவி ஏற்ற உதயநிதிக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் வாழ்த்து!

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மநீம கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ஆகியோர் அமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இன்று  காலை 9.30 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருக்கும் தர்பார் அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். 

    இந்த விழாவில் அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பேரவை கட்சித் தலைவர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மற்றும் முதல்வர் குடும்பத்தினர் ஆகியோர் பங்கேற்றனர்.

    இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மநீம கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ஆகிய இருவரும் அமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

    நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், “தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். 

    மநீம தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், “வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    உதயநிதி ஸ்டாலின், இனி திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்றும் நடிகர் கமல்ஹாசன் தயாரில் நடிக்க இருந்த திரைப்படத்திலிருந்து விலகுவதாகவும் இயக்குனர் மாறி செல்வராஜின் மாமனிதன் திரைப்படமே தனது கடைசி படம் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களை கண்டிப்புடன் கட்டுப்படுத்த சீன அரசு வேண்டுகோள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....