Friday, March 22, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரி, மக்கள் வாழ தகுதியான நகரமா என்பதை உறுதி செய்ய இணையவழி கணக்கெடுப்பு...

    புதுச்சேரி, மக்கள் வாழ தகுதியான நகரமா என்பதை உறுதி செய்ய இணையவழி கணக்கெடுப்பு…

    புதுச்சேரி மக்கள் வாழ தகுதியான நகரமா என்பதை உறுதி செய்ய இணையவழி கணக்கெடுப்பில் மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான என்.எஸ்.எஸ் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    இந்திய நகரங்களில் மக்களின் அன்றாட வாழ்வியல் சூழல் எந்த அளவிற்கு உகந்ததாக உள்ளது என்பதனை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், நகரங்களில் வாழும் மக்களிடம் நேரடியாக கருத்துக்களைக் கேட்க முடிவு செய்து அதற்கான கணக்கெடுப்பை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. 2022-ம் ஆண்டுக்காக வாழத் தகுதியான நகரங்களை மதிப்பீடு செய்வதற்காக இணைய வழி கணக்கெடுப்பை நவம்பர் மாதம் 9-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 23-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் புதுச்சேரி நகரம் எந்த அளவிற்கு வாழத் தகுதியுடைய நகரமாக உள்ளது என்பதை அறிந்துகொள்ளும் வகையில் https://col2022.org என்ற இணையதளத்தின் மூலம் இணைய வழி கணக்கெடுப்பில் புதுவை மக்கள் பெரிதும் பங்கெடுத்துக் கொள்வதை உறுதி செய்யும் பொருட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் NSS மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    கடற்கரைசாலையில் தொடங்கிய பேரணியை புதுச்சேரி பொலிவுறு நகர வளர்ச்சி நிறுவனத்தின் செயல் தலைவர் அருண் கொடியசைத்து துவக்கி வைத்தார். புஸ்ஸி வீதி, அண்ணாசாலை, நேருவீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியாக சென்று இறுதியாக கடற்கரைசாலை காந்தி சிலையில் நிறைவுபெற்றது. விழிப்புணர்வு பேரணியின் போது புதுச்சேரி பொலிவுறு நகர வளர்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் NSS மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தியவாறு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....