Tuesday, March 19, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்உபயோகமற்றதிலிருந்து தங்கம், சில்வரை பெறும் சகோதரர்கள்

    உபயோகமற்றதிலிருந்து தங்கம், சில்வரை பெறும் சகோதரர்கள்

    சகோதரர்கள் இருவர் மின் கழிவுகளில்(E-waste) இருந்து  தங்கம்,சில்வர்,அலுமினியம் முதலான உலோகங்களை பிரித்தெடுத்து வருகின்றனர். பிரித்தெடுத்தல் இயல்புதான் என்றாலும் இவர்களின் முறை மற்றமுறைகளை காட்டிலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் நிகழ்வதுதான் மாஸ்!

    ரைட் சகோதரர்கள் பறக்க முயற்சி செய்து வெற்றி பெற்றனர். நிதின்-ரோஹன் சகோதரர்கள் மெக்கானிக்கல் மற்றும் ஹைட்ரோ மெட்டலர்ஜிக்கல் கலவையின் மூலம் 98% உலோகங்களை மின் கழிவுகளிலிருந்து மீட்கும் முயற்சியில் வெற்றி பெற்றனர்.

    e-waste process

    இந்த சகோதரர்களின் அட்டரோ ரிசைக்கிளிங் (attero recycling) வீணாக போன பல மின் உதிரிபாகங்களில் இருந்து உலோகங்களை பிரித்தெடுக்கிறது. உதாரணமாக கணிணி, மானிட்டர், டிவிடி, கைப்பேசி, மின்னழுத்த கம்பிகள் போன்றவற்றை கூறலாம்.
    லித்தியம்-அயர்ன் பேட்டரிகளை மறுசுழற்சி செய்யக்கூடிய ஒரே இந்திய நிறுவனம் அட்டரோ ரிசைக்கிளிங்-தான். 2010 ல் நிதின்-ரோஹன் இந்த முயற்சிகளை முன்னேடுக்கும்போது அது அப்போது மிகவும் புதுமையானதாக பிரபலமடையாத ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது. இப்போதோ இவர்களுடன் ஜியோ, எல்ஜி, சாம்சங், விவோ, மாருதி, ஏசர் போன்ற நிறுவனங்களும் இணைப்பில் உள்ளது.

    e-waste recycling

    2021 ல் அரசாங்கத்துடன் இணைந்து மின்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
    UNFCCC (காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு) இவர்களது செயல்முறைகளைப் பார்த்து, ஒரு கிராம் செப்புப் பொருளை அட்டெரோவின் செயல்பாட்டிலிருந்து பிரித்தெடுப்பதற்குத் தேவையான ஆற்றலின் அளவு மிக குறைவாக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். மேலும் இதுவரை இவர்கள் 1,00,000 மெட்ரிக் டன் கார்பனை சேமித்துள்ளார்கள். இது மிகவும் பராட்டக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    உலகெங்கிலும் கணக்கிட்டால் வெறுமனே 20% மின் கழிவுகள் மட்டும்தான் தான் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் 2% மின்கழிவுகள் மட்டும்தான் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த இரண்டு சதவீதத்தில் இவர்களின் பங்கு அளப்பரியது.

    nithin rohan

    “ நமது சுற்றுச்சூழல் நம் அனைவரின் பொறுப்பாகும். அதை பாதுகாக்க நாம் நிலையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் நாம் அனைவரும் நம்மால் முடிந்த அனைத்தையும் அதற்காக செய்ய வேண்டும். நமது சுற்றுச்சூழலையும் சமுதாயத்தையும் தூய்மையாக வைத்திருப்போம், நமது மின் கழிவுகள் அறிவியல் முறையில் மறுசுழற்சி செய்யப்படுவதை உறுதி செய்வோம் ” இது நிதின்-ரோஹன் சகோதரர்கள் கூறிய அற்புதமான ஒன்று.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....