Wednesday, March 22, 2023
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியர்களை மீட்க உதவி செய்து வருகிறது ரஷ்யா!

    இந்தியர்களை மீட்க உதவி செய்து வருகிறது ரஷ்யா!

    இந்தியர்களையும் பிற நாட்டவர்களையும் மீட்க ரஷ்யா முன்வந்துள்ளது.

    ரஷ்யா உக்ரைன் பெரும் போரின் காரணமாக இந்தியர்கள் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். மேலும் பல விமானங்கள் மூலம் தாயகம் திரும்பி வருகின்றனர்.

    உக்ரைனில் தங்கியிருந்த மக்கள் அனைவரும் போர் சூழல் காரணமாக அங்கிருந்து அண்டை  நாடுகளான போலந்து, ஹங்கேரியா போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். 

    இந்தச் சமயம் நம் இந்தியாவில் ஆபரேஷன் கங்கா ( operation ganga ) என்ற பெயரில் மத்திய அரசு உக்கரைனில் சிக்கியுள்ள இந்திய மக்களை மீட்டு வருகிறது. இதுவரை 6400 மக்கள் தாயகம் திரும்பி உள்ளனர். 30 விமானங்கள் ( ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இந்திய விமானப் படையினரின் விமானங்கள் )  இயக்கப்பட்டுள்ளன.அடுத்த 24 மணி நேரத்தில் 18 விமானங்களை இயக்கப் போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    ஆபரேஷன் கங்கா பிரதமரின் நேரடிப் பார்வையில் உள்ளதாகவும் போர் நிலவரங்கள் மற்றும் மீட்டு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டங்களையம் நடத்தி வருகிறார்  எனவும் இதுவரை ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் உடன் இரண்டு முறை இந்தியர்களை மீட்க பேசியதாகவும் மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மேலும் தற்போது ரஷ்யா இந்தியர்களையும் பிற நாட்டு மக்களையும் மீட்க கார்க்கிவ் மற்றும் சுமி மாகாணங்கள் வழியாக பெலகோர்ட் என்ற இடத்திற்கு அழைத்து செல்ல 130 பேருந்துகள் இயக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bjp leader

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டுடின் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர்...