Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஅறிவியல்புகைப்பிடிப்பது போலவேதான் உறக்கமின்மையும்!

    புகைப்பிடிப்பது போலவேதான் உறக்கமின்மையும்!

    உறக்கத்தின் உண்மையான அர்த்தம் உணர தவறிய காலத்தில்தான் நாம் இப்போது வசித்துக்கொண்டிருக்கிறோம். உறக்கமின்மைதான் நம்மை உயர்த்தும் என்பது போல பலர் நடந்துக்கொள்கிறோம் அதுமட்டும்மில்லாது உறங்காததை பெருமையுடனும் சொல்லிக்கொள்கிறோம். ஆனால், தூக்கத்தை ஒற்றியதுதான் நமது உடலும் மூளையும்.

    உறக்கம் ஆற்றலை உள்வாங்க கூடிய மற்றும் வெளிப்படுத்த கூடிய சக்தியையும், எதிர்கொள்ளும் நாளில் சுறுசுறுப்பாக இயங்கவும் வழிவகை செய்கிறது. அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் (Massachusetts Institute of Technology) மாணவர்களுக்கு மத்தியில் நடத்திய ஆய்வில் நன்றாக உறங்கி எழும் மாணவர்கள், ஒழுங்கற்ற உறக்க முறையை கடைபிடிக்கும் மாணவர்களைவிட அதிகமான மதிப்பெண்களை பெறுவது நிரூபணமாகியிருக்கிறது.

    Sleep

    நினைவாக்க திறனும், கற்றல் திறனும் ஒருங்கே மூன்று படிகளை கொண்டது.  அவையாவன தகவல்களை பெறுதல், ஒருங்கிணைத்தல், தகவல்களை திரும்ப பெறுதல் அல்லது தேவைக்கெற்ப பயன்படுத்துதல் என்பனவாகும். நாம் விழித்திருக்கும்போது பெரும் தகவல்களை நம்மில் ஏற்கனவே உள்ள தகவல்களுடன் ஒருங்கிணைத்தல், அவற்றை வலுப்படுத்துதல் போன்றவை நம் உறக்கத்தின்போதுதான் நடக்கிறது.

    கணினியில் இருக்கும் ROM போலவே நமக்குள்ளும் நினைவகம் உள்ளது. அந்த நினைவகம் குறுங்கால நினைவகம் மற்றும் நீண்டகால நினைவகம் என இருவைகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் குறுங்கால நினைவகத்தில்தான் பெரும்பாலனவை நிலைபெறுகின்றன. நீண்டகால நினைவகத்தில் தகவல்கள் நிலைபெறுவது கடினமாகிவிட்டன. இதற்கு காரணம் போதுமான உறக்கமில்லாமைதான் எனவும், உறக்கமும் நினைவகமும் ஒன்றுக்கொண்று சமந்தமுடையது என்று கூறுகிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.

    Sleep

    மேலும் உறக்கமானது REM-விரைவு விழி இயக்க உறக்கம்,NREM – விரைவு விழி இயக்கமற்ற உறக்கம் என  இரண்டு படிநிலைகளை உடையது, NREM ல் மூன்று படிநிலைகள் உண்டு, உறக்கம், ஆழ்ந்த உறக்கம், மிகவும் ஆழ்ந்த உறக்கம். ஒவ்வொரு உறக்க சுழற்சியும் 90 – 120 நிமிடங்களுக்கு ஒருமுறை நடைபெறும். நீங்கள் எப்போதாவது திடீரென்று எழுந்து சிறிதுநேரம் குழப்பமாக உணர்ந்தீர்களா? அப்படியென்றால் நீங்கள் மிகவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தீர்கள் என்று பொருள்.

    NREM உறக்கத்தின் படிநிலை இரண்டு மற்றும் மூன்றில் உள்ள மெதுவான மூளை அலைகள் தற்காலிக சேமிப்பு தளத்திலிருந்து நிரந்தர சேமிப்பு தளமான ஹிப்போகாம்பஸிற்கு நினைவுகளை மாற்றுகிறது.

    Sleep

    ஒழுங்கான உறக்கம் தகவல்களைத் தக்கவைத்துக்கொள்ளும் திறனையும், நினைவுகூரும் திறனையும், சிக்கல் தீர்க்கும் திறனையும் மற்றும் நமது படைப்பாற்றலையும், கற்பனை சக்தியையும் மேம்படுத்துகிறது.  உறக்கமின்மை  உடலுக்கும், மனதுக்கும், நினைவாற்றலுக்கும், கற்றலுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

    உறக்கத்தின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். புகைப்பிடிப்பது தீங்கானது எனக்கூறுவது போலவே உறக்கமின்மையும் மனநலம் மற்றும் உடல்நலத்திற்கு தீங்கானது என அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....