Friday, March 31, 2023
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை ஐஐடி-யில் மேலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று - சுகாதாரத்துறை செயலர்

    சென்னை ஐஐடி-யில் மேலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று – சுகாதாரத்துறை செயலர்

    சென்னை தேனாம்பேட்டை டிஎம்ஸ் வளாகத்தில், மாநில தடுப்பூசிகள் தேக்க கிடங்கை ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலர் டாக்டர் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து, கொரோனா பாதிப்புகள் குறித்து பேசினார்.

    அவர் கூறுகையில், நான் பேசி முடித்த பின் மீண்டும் முகக் கவசம் அணிவேன் என்று தொடங்கினார். ஐஐடி வளாகத்தில் உள்ள அனைவருக்கும் முழுமையாக பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், ஐஐடியில் கடந்த நான்கு நாட்களில் இதுவரை 1420 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அதில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும் குறிப்பிட்டார். 

    மேலும், நேற்று இரவு முதல் இன்று காலை வரை 25 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார். அங்குள்ள அனைவரையும் நேரடியாக சந்தித்துள்ளதாகவும் அனைவரும் மிகக் குறைவான அறிகுறிகளுடன் இருப்பதாகவும் அவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 55 பேரில் சிலருக்கு தொண்டைக் கரகரப்பும் சிலருக்கு காய்யச்சலும் இருப்பதாக கூறினார்.

    இதுவரை அங்கு எடுத்த பரிசோதனையில், 100 விழுக்காடுகளில் 3.8 சதவிகிதம் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். மந்தாகினி என்ற விடுதியில் தான் தொற்று ஆரம்பித்தாகவும் மேலும் 13 வட மாநிலங்களில் இருந்து மாணவர்கள் புதிதாக அந்த விடுதிக்கு வந்ததாகவும் தெரிவித்தார். எங்கிருந்து வந்ததை ஆராய்வதை விட, இப்போது பெருந்தொற்று காலம் என்பதால் இதை தடுப்பதற்கான வழிமுறைகளில் தான் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.

    யாருக்கேனும் அறிகுறிகள் இருந்தால், இரண்டு மூன்று நாட்களில் மருத்துவர்களை அணுக வேண்டும் என்று குறிப்பிட்டார். மத்திய அரசின் வல்லுனர்களின் கருத்துக்களின் படி வகைகளைப்பற்றி வருத்தப்பட வேண்டாம் என்றும் இதுவரை தமிழகத்தில் எக்ஸ்இ கொரோனா வகை கண்டறியப்படவில்லை எனவும் கூறினார். 

    தமிழகத்தில் இதுவரை தொற்று நிலையில் உள்ளவர்கள் 286 பேர் என்றும், இது கடந்த ஆண்டைவிட மிகக் குறைவு என்றும் கூறினார். 17 பேர் மட்டுமே மருத்துவமனையில் இருப்பதாகவும் மீதம் உள்ளவர்கள் அனைவரும் வீட்டிலும் சுகாதார மையங்களிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இரண்டு பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படியுங்கள், தமிழகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதாமா? இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    kalashtra sexual harassment issue

    நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம்; பாலியல் தொல்லை காரணமாக கலாஷேத்ரா மாணவர்கள் திட்டவட்டம்!

    சென்னை கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக மாணவர்கள் தமிழ்நாடு முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.  சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. மாணவர்கள் சிலர் காணொளி வெளியிட்டு புகார்களை...