Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்எதிர்க்கட்சி விருந்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் : பாஜகவை கழட்டி விடப்போகும் எண்ணமா ?

    எதிர்க்கட்சி விருந்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் : பாஜகவை கழட்டி விடப்போகும் எண்ணமா ?

    பீகார் முதல்வர் நிதிஷ்குமார், எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி அளித்த இப்தார் நோன்பு விருந்தில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளார். பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டி விட நிதிஷ்குமார் இவ்வாறு செய்கிறாரோ ? என்று பீகார் அரசியல் தளம் பரபரப்பாகியுள்ளது. 

    2017ஆம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து இருந்தபொழுது இறுதியாக நிதிஷ்குமார், தேஜஸ்வியின் இப்தார் விருந்தில் கலந்து கொண்டு இருந்தார். மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இவர் இந்த விருந்தில் கலந்துக் கொண்டுள்ளார். அவருடன் பாஜகவைச் சேர்ந்த ஏ.என்.சிங், ஷா நவாஸ் உசைன் மற்றும் லோக் ஜன சக்தியின் தலைவர் சிராக் பஸ்வான் ஆகியோர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். 

    பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விருந்து நிகழ்வில், அனைவரும் புறப்பட்டுச் சென்ற பிறகும் லோக் ஜன சக்தியின் தலைவர் சிராக் பஸ்வான் நீண்ட நேரம் அங்கு பேசிக்கொண்டிருந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என்று பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து பேசிய பாஜக தலைவர் ஷா நவாஸ் உசேன், முதல்வர் நிதிஷ் குமார், சுஷில் மோடி ஆகியோர் அளித்த விருந்திலும் கலந்து கொண்டார். அதே போல் தான் இந்த நிகழ்வும் என்று கூறி  இருக்கிறார். 

    2020 தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்த நிதிஷ் குமார், பாஜகவின் உதவியுடன் ஆட்சியில் இருந்து வருகிறார். இந்நிலையில், நிதிஷ் குமாரை குடியரசுத் தலைவராக்கி டெல்லிக்கு அனுப்பி வைத்துவிட்டு பீகாரில் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் மற்ற எதிர்கட்சிகளுடன் இணைந்து மீண்டும் மெகா கூட்டணியை நிதிஷ் குமார் உருவாக்கும் முயற்சிக்கு அடித்தளமே இது என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

    தற்பொழுது கூட்டணி பிரியும் பட்சத்தில், ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து நிதிஷ்குமார் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வார். மற்றொரு பக்கம் நிதிஷ்குமாருக்கு மிகவும் நெருங்கிய பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளார் பிரஷாந்த் கிஷோர், காங்கிரசில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தான் பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி உருவாவது தொடர்பான செய்திகளும் பரவி வருகின்றன.

    இதையும் படியுங்கள், இந்தியா-இங்கிலாந்து இடையே புதிய ஒப்பந்தங்கள்- போரிஸ் ஜான்சன் கூறியது என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....