Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅதிகரிக்கும் கொரோனா - 20 கோடி தடுப்பூசிகள் வீணா? என்ன சொல்கிறது தடுப்பூசி நிறுவனம்!

    அதிகரிக்கும் கொரோனா – 20 கோடி தடுப்பூசிகள் வீணா? என்ன சொல்கிறது தடுப்பூசி நிறுவனம்!

    கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்து வருவது தடுப்பூசிகள்தான். மாறுபட்ட கருத்துகள் பல இருந்தாலும், தடுப்பூசியை செலுத்திக்கொள்வதே கொரோனாவில் இருந்து நம்மைக் காப்பாற்றும் என்று மத்திய மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன. 

    இந்தியாவை பொறுத்தவரையில், கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் பரவலாக உபயோகிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள்தான் அதிக அளவில் செலுத்தப்பட்டன.

    தமிழகத்தில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் இலவசமாக மக்களுக்கு செலுத்தப்பட்டன. மக்களை தடுப்பூசி செலுத்த வைப்பதற்கென முகாம்கள், மெகா முகாம்கள் போடப்பட்டு வந்தன. தடுப்பூசி குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் மூலமும் மக்களை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தி வந்தது, தமிழக அரசு.  

    ஆனால், தற்போதோ மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருவதே இல்லை. கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக குறைந்துள்ள நிலையில், மக்களுக்கு கொரோனா தொற்றின் மீது இருந்த பயம் குறைந்துவிட்டதாகவும் அதனால்தான் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள யாரும் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. 

    உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசிகள் பலவும் தேங்கியிருப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும், கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை 4 மாதங்களுக்கு முன்பே நிறுத்திவிட்டதாக அதை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இத்தகவலை, அதிகாரப்பூர்வமாக  சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவன தலைவர் அதார் பூனாவாலா அவர்களே தெரிவித்தார். அதிகளவில் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால் அவற்றின் உற்பத்தியை கடந்த டிசம்பர் மாதமே நிறுத்திவிட்டதாக அவர் தெரிவித்தார். 

    20 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ள நிலையில் அவற்றை இலவசமாக தர முன் வந்தும் கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை என்று அதார் பூனாவாலா தெரிவித்ததுள்ளது பலரிடத்திலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    தற்போது, படிப்படியாக இந்தியாவில் கொரோனா அதிகரித்துவருவதால், மீண்டும் தடுப்பூசி செலுத்துதல் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    கொரோனா மீண்டும் பரவுவதை தடுக்க முகக்கவசம் அணியுமாறும், தனி மனித இடைவெளி போன்ற கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.

    இதையும் படியுங்கள், தமிழகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதாமா? இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....