Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதாமா? இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா!

    தமிழகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதாமா? இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா!

    கடந்த சில மாதங்களாக குறைவாக இருந்த கொரோனா பரவல் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில், கொரோனா பரவலானது திடீரென அதிகப்படியான ஏற்றத்தை சந்தித்து வருகிறது.

    இதனால் மத்திய, மாநில அரசுகள் மீண்டும் மக்களிடத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுமாறும், தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுமாறும் கூறி வருகின்றனர். 

    இதற்கிடையில், இப்போதைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகமாக இல்லை என்றும், தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அதேசமயம், மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

    மேலும், அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை மீண்டும் அமல்படுத்த இருப்பதாக தெரிவித்தார். அதன்படி, இனி தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

    கடந்த மூன்று நாட்களில் சென்னை ஐஐடியில் மட்டுமே 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் சற்றே பதற்றமடைந்து வருகின்றனர். ஆனால், மக்கள் பயப்பட வேண்டாம் என்றும், அலட்சியமாக இல்லாமல் கவனமாக இருக்கவும் மக்களை ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். 

    கொரோனா..கொரோனா என்று மீண்டும் பேச்சு வழக்குகள் நிறைவதால் மக்கள் தாமாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம் என்றும், கொரோனா தொடர்பான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. 

    டெல்லியில் பரவி வரும் கொரோனா பாதிப்பிற்கு ஒமிக்ரானின் புதிய வகை மாறுபாடே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆம்! அவர்களின் கூற்றுப்படி, ஒமிக்ரானின் துணை மாறுபாடான பிஏ.2.12 வகை வைரஸ்தான்  தற்போதைய கொரோனா தொற்று பரவலுக்கு காரணமாக இருக்கிறது. ஆனால், தமழகத்தில் ஒமிக்ரானின் புதிய வகை குறித்து தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. 

    இதையும் படியுங்கள், கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் – அதிர்ச்சியில் மக்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....