Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇன்று பேயாட்டம்தான்; அதிரடிக்கு பஞ்சமில்லாத 'டபுள் தாமாக்கா' - ஐபிஎல் பார்வை!

    இன்று பேயாட்டம்தான்; அதிரடிக்கு பஞ்சமில்லாத ‘டபுள் தாமாக்கா’ – ஐபிஎல் பார்வை!

    ஐபிஎல் தொடரில் இன்று இரு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இன்று மதியம் 3:30 மணிக்கு மும்பையில் உள்ள டி.ஓய்.பாட்டில் மைதானத்தில் கொல்கத்தா அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக்கொள்ள இருக்கின்றன. 

    ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியானது, முதலில் நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் சிறப்பான இடத்தில் இருந்தது. ஆனால் அதன்பின்னர், தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    பெரிதும் நம்பப்பட்ட பந்துவீச்சாளர்களான கம்மின்ஸ் மற்றும் வருண் சக்கரவர்த்தி தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். வெங்கடேஷ் ஐயரும் இந்த தொடரில் இதுவரை பெரிதாக சோபிக்கவில்லை. 

    குஜராத் டைட்டன்ஸ் அணியை பொறுத்தவரை, புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்த்இல் உள்ளது. தொடக்க ஆட்ட இணையைத் தவிர, மற்ற அனைவருமே சரிவர செயல்படுகிறார்கள் என்றுதான் கூற வேண்டும். 

    இன்று நடைபெற இருக்கும் மற்றொரு ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியானது மும்பையில் உள்ள பிரபார்ன் மைதானத்தில் இன்று இரவு 7: 30 மணிக்கு தொடங்க உள்ளது. 

    இரு அணிகளும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ள நிலையில், இன்றையப் போட்டியானது விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதியதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 ஆட்டத்திலும், 11 ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும் வெற்றிப்பெற்றுள்ளன. 

    இரு அணிகளும் கடந்தப் போட்டியில் மேற்கொண்ட அதிரடிகளால் இன்றையப் போட்டியிலும் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது என்ற எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படியுங்கள், பட்லர் காட்டிய வெறித்தனம்; ரன் மழையால் நிறைந்த போட்டி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....