Saturday, March 16, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்புதிய தொழில்.. புதிய களம்.. தன் மகளை தொழிலதிபர் ஆக்கிய அர்ஜுன்!

    புதிய தொழில்.. புதிய களம்.. தன் மகளை தொழிலதிபர் ஆக்கிய அர்ஜுன்!

    நடிகர் அர்ஜுன் அவரது இரண்டாவது மகளை தொழிலதிபர் ஆக்கியுள்ளது ரசிகர்கள் மற்றும் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்த்திரையுலகில் நடிகர், இயக்குநனர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டு வலம் வந்தவர் தான் அர்ஜுன்.

    தமிழ்த்திரை உலகில் இவருக்கு என பெரிய இடம் இருக்கிறது. பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த இவர், அண்மையில் சில காலமாக வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

    தற்போது இவர் நடிகர் விஜயின் தளபதி 67 திரைப்படத்திலும் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் அர்ஜுன் கடந்த 1988 ஆம் ஆண்டு நடிகை நிவேதிதாவை திருமணம் செய்து கொண்டார்.

    இவர்கள் இருவருக்கும் ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகளான ஐஸ்வர்யா திரையுலகில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

    குறிப்பாக தமிழில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக பட்டத்து யானை என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின்பு, தற்போது தெலுங்கு திரையுலகிற்கு சென்றுள்ளார்.

    தனது மூத்த மகளை கதாநாயகி ஆக்கிய அர்ஜுன், தற்போது தனது இளைய மகள் அஞ்சனாவை திரையுலகம் பக்கம் கொண்டு வரவில்லை. இதற்கு காரணம் அஞ்சனாவுக்கு சினிமா மீது சுத்தமாக ஆர்வம் இல்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் தான், அர்ஜுனின் இளைய மகளான அஞ்சனா தற்போது தொழிலதிபராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். அப்படி என்ன தொழில் என்றுதானே கேட்கிறீர்கள்? அவர் தற்போது ஹேண்ட் பேக்குகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

    இதில் என்ன இருக்கிறது எல்லாரும் செய்யக் கூடிய தொழில் தானே என்று கேட்டால், ஆம் இதில் தனித்துவம் ஒன்று இருக்கிறது. அது என்னவென்று கேட்டால் அந்த ஹேண்ட் பேக்குகள் அனைத்தும் பழ தோல்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது.

    இதைத் தான் விற்பனை செய்து வருகிறார் அஞ்சனா. அதுவும் உலகிலேயே முதல்முறையாக பழ தோல்களைக் கொண்டு ஹேண்ட் பேக்குகள் தயாரிக்கும் நிறுவனமாக அஞ்சனாவின் சர்ஜா நிறுவனம் விளங்கி வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிறுவனத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் நடந்தது. இதில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கலந்து கொண்டார்.

    அர்ஜுன் மகளின் இந்த புதிய தொழில் மென்மேலும் வளர இணைய உலகில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

    இதையும் படிங்க: 100 ரூபாய் கொடுத்தது குத்தமா? முடிவுக்கு வந்த வையாபுரியின் 8 ஆண்டுகால போராட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....