Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசாதிக்க வயது ஒரு தடை இல்லை - 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதிய சாதனை படைத்த...

    சாதிக்க வயது ஒரு தடை இல்லை – 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதிய சாதனை படைத்த 105 வயது மூதாட்டி!

    அரியானாவை சேர்ந்த 105 வயது மூதாட்டி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு 45.40 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

    குஜராத் மாநிலம் வதேதரா நகரில் இந்திய தேசிய தடகள சம்மேளனம் சார்பில் தேசிய முதியோர் தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அரியானாவை சேர்ந்த 105 வயது மூதாட்டி ராம்பாய் புதிய சாதனை படைத்தார்.

    அவர் 45.40 வினாடிகளில் பந்தய தூரத்தை ஓடி கடந்தார். இதுபோல கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் ராம்பாய் மூதாட்டி ஒரு நிமிடம் 52.17 வினாடிகளில் ஓடி சாதனை படைத்தார். 105 வயதில் தேசிய போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த மூதாட்டி ராம்பாய்க்கு மைதானத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    அதேபோல் 100 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஓட்டப்போட்டியில் ராம்பாய் மட்டுமே பங்கேற்று ஓடியிருந்தார். இதில் அவர் புதிய சாதனை படைத்ததோடு, தங்க பதக்கமும் வென்று அசத்தியுள்ளார். மூதாட்டியின் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வயதில், அவர் ஓட்டப்பந்தயத்தில் ஓடி புதிய சாதனை படைக்க அவரின் வாழ்க்கை முறையும், தான் எடுத்துக் கொள்ளும் உணவு முறைதான் காரணம் என்கிறார்.

    தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து சுமார் 4 கிலோ மீட்டத் தூரம் ஓட்டப்பயிற்சி மேற்கொள்வாராம். தினமும் கோதுமை, பால், தயிர் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதாக கூறுகிறார்.சுத்த சைவமான ராம்பாய், நாள்தோறும் 250 கிராம் நெய் மற்றும் 500 கிராம் தயிரை உணவில் சேர்த்துக்கொள்வார் என்றும் கூறுகிறார். கோதுமை ரொட்டிகளை விரும்பி சாப்பிடும் ராம்பாய், அரிசி உணவை அதிகமாக எடுத்துக்கொள்வது இல்லை என்கிறார்.

    இந்த உலகில் சாதனைகளை படைக்க வயது ஒன்றும் விதிவிலக்கல்ல. அவை வெறும் எண்கள் தான் என்று கூறுவார்கள். அதற்கேற்ப, ராம்பாய் தடகள போட்டியில் தனிநபராக கலந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். தனது 105 வயதிலும் சாதனை தாகத்தை தீர்க்க இந்தியா முழுதும் ஓடி வரும் ராம்பாய் நம்மில் பலருக்கு முன்னோடியாக இருக்கிறார்.

    அவர் ஏன் முன்னதாக இதுபோன்ற ஓட்டப் பந்தயங்களில் போட்டியிடவில்லை என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டதற்கு, “நான் எப்போதும் தயாராகவே இருந்தேன், ஆனால் இதற்கு முன் யாரும் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை!” என்று தெரிவித்து இருக்கிறார். இப்போட்டியில் பதக்கம் வென்றது குறித்து அவர் பேசுகையில், “இது சிறப்பான உணர்வாக உள்ளது. இனி சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

    இன்னும் சற்று நேரத்தில் துவங்கப்போகும் அதிமுக பொதுக்குழு.. வாகன நெரிசலில் சென்னை சாலைகள்..!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....