Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இன்னும் சற்று நேரத்தில் துவங்கப்போகும் அதிமுக பொதுக்குழு.. வாகன நெரிசலில் சென்னை சாலைகள்..!!

    இன்னும் சற்று நேரத்தில் துவங்கப்போகும் அதிமுக பொதுக்குழு.. வாகன நெரிசலில் சென்னை சாலைகள்..!!

    அதிமுகவின் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பொதுக்குழு கூட்டமானது இன்னும் சற்று நேரத்தில் துவங்கவுள்ளது. பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது இல்லத்திலிருந்து கிளம்பி வந்து கொண்டிருக்கின்றனர்.

    தமது இல்லத்திலிருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வழி முழுவதும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அவருக்கு மலர்கொத்துகள் வழங்கியும், வாழ்த்துக் கோஷங்களை எழுப்பியும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    மற்றொருபுறம் ஓ.பன்னீர்செல்வம், தனது வீட்டிலிருந்து அதிக அளவு ஆர்பாட்டமின்றி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் புகைப்படம் ஒட்டிய வாகனத்தில் வந்து கொண்டிருக்கிறார்.

    பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்கு நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று கூறிவந்த நிலையில், பலர் போலி நுழைவுச்சீட்டுகளை பயன்படுத்தி மண்டபத்தில் நுழைந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

    வாகன நெரிசல்..

    பொதுக்குழுவானது வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுவதால் அந்த சாலை முழுவதும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக பூந்தமல்லி, வானகரம் செல்லும் சாலைகள் கடும் நெரிசலில் சிக்கியுள்ளன. இதனால் அப்பகுதியில் வேலைக்கு செல்வோர், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    சாலைகளில் அதிமுக தொண்டர்கள் குவிந்திருப்பதாலும் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. வாகன நெரிசலால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் வாகனங்கள் மெதுவாகவே பொதுக்குழு கூட்டம் நடக்கும் மண்டபத்தினை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

    மேலும், கோயம்பேடு முதல் மதுரவாயல் செல்லும் பகுதியிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. புழல்-தாம்பரம் வெளிவட்ட சாலையில் இருந்து சென்னைக்குள் வர கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எந்த விதமான கலவரங்களும் ஏற்படாமல் இருக்க ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுக்குழு நடைபெறும் மண்பத்தில் மட்டும் இரண்டாயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.

    இந்த பொதுக்குழுவிற்கு அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை வகிப்பார் எனது தெரிகிறது. ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் கொடுத்த 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்போவதாக தகவல்கள் வெளியாகின்றன.

    பொதுக்குழுவில் பங்கேற்கும் அனைவரும் வருகைப்பதிவாட்டில் கையெழுத்திடவேண்டும் என்கிற நடைமுறை இதுவரை வழக்கத்தில் இருந்து வந்த நிலையில், இந்த கூட்டத்தில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    பரபரப்பான இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வருகை தாமதமாவதால் பொதுக்குழுவானது காலை பதினோரு மணியளவில் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மாற்றுப்பாதையினைத் தேர்ந்தெடுத்து மண்டபத்தினை அடைந்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

    இந்த பொதுக்குழுவில் அதிமுகவில் ஒற்றைத்தலைமை உறுதிசெய்யப்படுமா என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....