Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இனி சொல்வதை செய்யுங்கள் இல்லையெனில் வெளியேறுங்கள் - நெட்ஃபிளிக்ஸ் அதிரடி அறிவிப்பு!

    இனி சொல்வதை செய்யுங்கள் இல்லையெனில் வெளியேறுங்கள் – நெட்ஃபிளிக்ஸ் அதிரடி அறிவிப்பு!

    உலக அளவில் பிரபலமான ஓடிடி தளங்களில் ஒன்றாக அறியப்படுவது நெட்ஃபிளிக்ஸ். புதிய திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், நிகழ்ச்சிகள் என அனைத்தும் ஒளிபரப்பப்படுவதால் நெட்ஃபிளிக்ஸுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான சந்தாதாரர்கள் உள்ளனர்.

    இந்நிறுவனம் தனது பணியாளர்களுக்குச் சராசரியாக 180,000 அமெரிக்க டாலரை சம்பளமாக அளிக்கிறது. அதிக சம்பளம் தரும் டாப் 15 நிறுவனங்களில் நெட்ஃபிளிக்ஸும் ஒன்றாகும்.

    நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தங்கள் பணியாளர்களுக்கு புதிய வகை அறிவுறுத்தளை வழங்கி உள்ளது. அது என்னவென்றால், “நிறுவனம் வழங்கும் பணிகளை செய்யுங்கள்; அதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றால் பணியில் இருந்து வெளியேறி விடுங்கள்” என்பதாகும்.

    இதனிடையே, நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும் டேவ் சேப்பலின் நகைச்சுவை நிகழ்ச்சிக்கு மேற்கத்திய நாடுகளில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மூன்றாம் பாலினத்தவரை கேலி செய்யும் விதமாக நகைச்சுவைகள் தொகுக்கப்படுவதால் இதனை தடை செய்ய வேண்டும் என போராட்டங்களும் நடைபெற்றன.

    இதனிடையே, நெட்ஃபிளிக்ஸ் ஊழியர்களே இந்நிகழ்ச்சிக்கு எதிராக அண்மையில் போராட்டத்தில் குதித்தனர். இது, அந்நிறுவனத்தை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனினும், டேவ் சேப்பலின் நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பப்படும் என நெட்ஃபிளிக்ஸ் அறிவித்தது.

    இது போன்ற பல வகையான சர்ச்சைகளை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் எதிர்கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    நான்காவது இடத்திற்கு முன்னேறிய டெல்லி; இக்கட்டான நிலையில் பஞ்சாப் அணி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....