Saturday, March 16, 2024
மேலும்
    Homeஆன்மிகம்இரண்டு ஆண்டுகளாக இல்லை.. ஆனால், இப்போதோ கோலாகலம் - களைகட்டும் கொலு!

    இரண்டு ஆண்டுகளாக இல்லை.. ஆனால், இப்போதோ கோலாகலம் – களைகட்டும் கொலு!

    மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக அனுசரிக்கப்படும் நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் இன்று முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது .

    மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி அதாவது துர்க்கை அம்மன் ஒன்பது அவதாரங்களை எடுத்து ஒன்பது நாட்கள் போரிட்டு, பத்தாவது நாளில் அவனை வதம் செய்து வெற்றி கொண்ட நிகழ்வையே நவராத்திரியாக இந்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி பண்டிகை புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை முடிந்து மறுநாள் பிரதமை தொடங்கி தசமி வரை நடைபெறும். இந்த பத்து நாட்களும் கோவில்களில் மட்டுமல்ல வீடுகளிலும் பண்டிகைக் கோலமாகத்தான் காட்சியளிக்கும்.

    அப்படிப்பட்ட இந்த நவராத்திரி பண்டிகை முதன் முதலில் ராமரால் கொண்டாடப்பட்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று சொல்லப்படுகிறது.

    இப்படி வெகு விமரிசையாக கொண்டாடப்படும் இந்த நவராத்திரி பண்டிகையின் ஒன்பது நாட்களும், துர்கா தேவியின் தனித்துவத்தை தெரிவிக்கும் வகையில் ,அம்மனின் ஒன்பது அவதாரங்களுக்கும் ஏற்ற பூஜைகள் செய்யப்படும். மேலும், நவராத்திரியின் 9 நாட்களும் வெவ்வேறு பிரசாதங்கள் கடவுளுக்கு படைக்கப்பட்டு வழிபடப்படுவதோடு, தமிழகத்தில் வீடுகள், கோயில்களில் வண்ணமயமான, வித்தியாசமான கொலு வைத்து நவராத்திரி கொண்டாடப்படும். அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்களும் அவரவர் வீடுகளில் கொலுவைத்து, பஜனைகள் பாடி கொண்டாடி மகிழ்வர். அதற்காக சிரத்தை எடுத்து அவரவர் வீடுகளில் சேகரித்து வைத்திருக்கும் பொம்மைகளை துடைத்து எடுத்து, உறவுகளை அழைத்து பல்வேறு விஷயங்களை நினைவுபடுத்தி மகிழ்வதோடு, அந்தந்த கால கட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக புதிய முயற்சிகளையும் கொலுவாக வைத்து உறவுகளை அழைத்து ரசிப்பர்.

    இதற்காக புதிய கொலு பொம்மைகளை வாங்கி, வீட்டில் கொலு வைக்கும் நிகழ்வுகள் சென்னையில் கலைகட்டத் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா லாக்டவுன் காரணமாக கொலு பொம்மைகள் விற்பனை நடைபெறாமல் இருந்த நிலையில்,இந்த ஆண்டு பல்வேறு கடைகளில், கொலு பொம்மைகள் விற்பனையும் கலைகட்டியுள்ளது .

    சென்னை தியாகராய நகர், மயிலாப்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் விநாயகர், சிவன் போன்ற இறைவன் சிலைகள் மட்டுமல்லாது இயற்கை, மனித வாழ்வியல் கலந்த ஆராய்ச்சி, மருத்துவம், தொழிநுட்பம் போன்ற பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு பார்வையாளர்களின் கண்களை கொல்லை கொண்டு பறிக்கும் வகையில் கிருஷ்ணர், திருமணம், வளைகாப்பு , காதணி விழா, திருமண ஊர்வலம் என என்னற்ற கருப்பொருட்களை உள்ளடக்கிய பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தாலும், புதுவிதமாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உருவம் பொறித்த கொலு பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டு, பொதுமக்களும் அந்த பொம்மைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

    இதனால் நவராத்திரி விழா கலைகட்டத் தொடங்கியுள்ளதோடு, மாலை வேலைகளில் பொதுமக்களின் கூட்டம் கொலு பொம்மைகள் நிறைந்துள்ள கடைகளை நோக்கி அலைமோதத் தொடங்கியுள்ளது. விற்பனையும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

    இதையும் படிங்க : இரவில் மட்டுமே பூக்கும் நிஷாகந்தி என்று அழைக்கப்படும் ‘பிரம்ம கமலம்’

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....