Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்த புது திட்டம்...பயணிகளே தெரிஞ்சுக்கோங்க!

    இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்த புது திட்டம்…பயணிகளே தெரிஞ்சுக்கோங்க!

    மின்னணு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவதற்கான புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது இந்திய ரயில்வே நிர்வாகம்.

    இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையிலும், ரயில் நிலையங்களில் உள்ள உணவு தயாரிப்பு நிறுவனங்கள் வாயிலாக உணவுப் பொருள்களை கொள்முதல் செய்வதற்கு மின்னணு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவதற்கான வசதிகளை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது

    இதுகுறித்து இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    டிஜிட்டல் இந்தியா முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், நாடு முழுவதும் 8.878 இடங்களில் மின்னணு பண பரிவர்த்தனை செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, வழங்கப்பட்ட உணவுகளின் விலையை அச்சிட்டு அளிப்பதற்கு, கையடக்க ‘பிஓஎஸ்’ எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அதன்படி, 4,316 நிலையான உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு கையடக்க பிஓஎஸ் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 596 ரயில்களில் 3081 கையடக்க விற்பனை பதிவு பிஓஎஸ் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன..

    மேலும், மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் அனைத்து விவரங்களையும் அச்சிடப்பட்ட ரசீதுகள் மற்றும் விலைப்பட்டியல்களை உருவாக்கவும், அதிக கட்டணம் வசூலிக்கும் புகார்களை நிவர்த்தி செய்யவும் உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு கையடக்க பிஓஎஸ் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இ- கேட்ரிங் சேவை வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. பயணிகள் இ-டிக்கெட் மூலம் பயணச்சீட்டை முன் பதிவு செய்யும் போதே, அவர்களுக்கு தேவையான உணவு வகைகளையும் முன்பதிவு செய்யலாம்.. அதுமட்டுமில்லாமல், ரயிலில்களில் பயணம் செய்யும் பயணிகள் செயலி, சேவை மையம், இணையதளம் வசதியை பயன்படுத்தியோ அல்லது 1323 என்ற எண் மூலம் தொடர்பு கொண்டோ தங்களுக்கு தேவையான உணவு வகைகளை முன்பதிவு செய்யலாம்.

    இ-கேட்ரிங் சேவை தற்போது 310 ரயில் நிலையங்களில் 1755 சேவை தாரர்கள் மற்றும் 14 உணவு நிறுவனங்கள் மூலம் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு இந்த சேவைகள் மூலம் 41,844 உணவு வகைகள் வழங்கப்படுகின்றன.

    இவ்வாறு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க : ஆர்டெமிஸ் ராக்கெட் ஏவுவதில் மீண்டும் சிக்கல்! மூன்றாவது முறையாக ஒத்திவைத்த நாசா… 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....