Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉயிர் காக்கும் மருத்துவர்களுக்கு குவியும் வாழ்த்துகள்

    உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு குவியும் வாழ்த்துகள்

    இன்று தேசிய மருத்துவர்கள் தினமாதலால், அவர்களது சேவையின் பாராட்டி நாட்டின் பல தலைவர்களும் நன்றி கூறி வருகின்றனர். அவர்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களின் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்:

    ‘ஏழை மக்களுக்கு அன்புள்ளத்துடன் சிகிச்சை அளித்ததோடு, விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்து, பின்னாளில் மேற்கு வங்க முதலமைச்சராக உயர்ந்த மருத்துவர் பி.சி.ராய் அவர்களின் பிறந்தநாளான இன்று தேசிய மருத்துவர்கள் தினமாகும்.’

    பிணி நீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம்.’ என்று தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி:

    ‘கடினமாக உழைத்துக்கொண்டிருக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் தின வாழ்த்துகள். இந்த உலகமானது ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு மருத்துவர்கள் ஒரு முக்கிய அங்கமாக உள்ளனர்.’ என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி:

    ‘அனைத்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், மருத்துவம் சார்ந்த மற்ற அலுவலர்களுக்கும் எனது மரியாதை கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’ என்று மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ்:

    ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ், ‘தனது பணியே முதலானது என தொடர்ச்சியாக சேவை செய்து வரும் இந்த உலகின் சூப்பர் ஹீரோக்களுக்கு மருத்துவர்கள் தின வாழ்த்துகள்.’ என்று பதிவிட்டுள்ளது.

    தேசிய கட்சியான காங்கிரஸ், உள்துறை அமைச்சரான அமித் ஷா, ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், ஸ்மிரிதி இரானி மற்றும் பல தலைவர்களும், பொதுமக்களும் மருத்துவர்கள் தினத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    டாக்டர் பிதான் சந்திர ராய் எனப்படும் மருத்துவரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1882ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்த டாக்டர் ராய், அதே தேதியில் 1962ம் ஆண்டு மறைந்தார்.

    இன்று முதல் நெகிழிகளுக்கு தடை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....