Sunday, March 17, 2024
மேலும்
  Homeசெய்திகள்அரசியல்நுபுர் ஷர்மாக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

  நுபுர் ஷர்மாக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

  நுபுர் ஷர்மா மீது தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய நுபுர் ஷர்மாவின் மனுவை விசாரித்த நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

  முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தொலைக்காட்சியில், இஸ்லாமிய தூதர் நபிகள் நாயகம் பற்றி சர்ச்யைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இதன்காரணமாக, நுபுர் ஷர்மாவை பாஜக கட்சியிலிருந்து நீக்கியது. 

  இவர் பேசிய கருத்து உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் இவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. வெளிநாடுகளில் இருந்தும் இவரின் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. 

  நுபுர் ஷர்மா மீது பல்வேறு புகார்கள் பதிவாகி உள்ளது. மேலும், அவரை கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கைகளும் வைக்கப்பட்டது. 

  இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த தாலிபன்கள், இந்தியாவின் பல்வேறு இடங்களில் மனித வெடிகுண்டு வைக்கப்போவதாக கடிதத்தின் வழியாக எச்சரிக்கை விடுத்தனர்.

  இந்நிலையில், முகமது நபிகள் குறித்த கருத்தால் பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தில்லிக்கு மாற்றக் கோரி நுபுர் ஷர்மா மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நுபுர் ஷர்மாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். 

  இந்த வழக்கில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

  தனது பொறுப்பற்ற பேச்சினால் நுபுர் ஷர்மா நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார். நுபுர் ஷர்மா மீது பதிவான புகார்கள் குறித்து தில்லி காவல்துறை என்ன செய்கிறது. நுபுர் ஷர்மா நடந்துக் கொண்ட விதம், பிறகு அவரது வழக்குரைஞர் சொல்வதெல்லாம் வெட்கக்கேடானது. உதய்பூரில் ஒருவர் கொள்ளப்பட்டது நுபுர் ஷர்மாவின் பேச்சால் தான். நுபுர் ஷர்மா தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

  ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பதால், எதை வேண்டுமானாலும் பேசிவிட முடியாது. நாட்டில் இப்போது நடந்துக் கொண்டிருப்பதற்கு இந்த பெண்மணியே பொறுப்பு என நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள். 

  மேலும் நீதிபதிகள், நுபுர் ஷர்மா அவருடைய கருத்துக்களை திரும்பப் பெற்றது என்பது காலம் தாழ்த்திய செயலாகும். நுபுர் ஷர்மா தனது உயிருக்கு ஆபத்து என்கிறார். ஆனால், அவரால் தான் இந்த ஒட்டுமொத்த நாட்டுக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவரைப் போன்றவர்கள் ஒருவித நோக்கத்துக்காகவே பேசுகின்றனர். இப்படி பேசுவதை வைத்து விளம்பரம் தேடுகின்றனர். 

  நுபுர் ஷர்மாவின் மீது இத்தனை வழக்குகள் தொடுக்கப்பட்டு இருக்கின்றனவே? தில்லி காவல்துறை ஏன் நுபுர் ஷர்மாவை இதுவரை கைது செய்யவில்லை? விசாரணைக்காக சென்ற நுபுர் ஷர்மாவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்ததா? அதிகாரம் தங்களிடம் இருப்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது எப்படி சரியாகும்? 

  இது ஜனநாயக நாடு தான். இங்கு பேச்சுரிமை இருக்கிறது. புல் வளர்வதற்கும் உரிமை இருக்கிறது. அதேபோல் புல்லை கழுதை மேய்வதற்கும் கூட உரிமை இருக்கிறது. அதனால், அனைத்து வழக்குகளையும் தில்லிக்கு மாற்ற கோரும் நுபுர் ஷர்மாவின் மனு நிராகரிக்கப்படுகிறது. எந்தவொரு பரிகாரத்தையும் தேட உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

  இன்று முதல் நெகிழிகளுக்கு தடை!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....