Saturday, March 16, 2024
மேலும்
    Homeஅறிவியல்பூமிக்கு வர இருந்த ஆபத்து -சிறுகோள் மீது டார்ட் விண்கலத்தை மோதச் செய்து நாசா நிகழ்த்திய...

    பூமிக்கு வர இருந்த ஆபத்து -சிறுகோள் மீது டார்ட் விண்கலத்தை மோதச் செய்து நாசா நிகழ்த்திய சாதனை

    அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா பூமியை தாக்க இருந்த சிறுகோள் ஒன்றின் மீது, விண்கலத்தை வெற்றிகரமாக மோதச் செய்து தன் வெற்றி சரித்திரத்தை படைத்துள்ளது.

    பூமியை சுற்றி சிறுகோள்கள், வால்மீன்கள், விண்கற்கள் என லட்சக்கணக்கானவை சுற்றி வருகின்றன. இவற்றில் ஏதாவது ஒரு விண்கற்களோ, கோள்களோ பூமியை தாக்க வாய்ப்புள்ளதா என்று அவ்வப்போது விஞ்ஞானிகளால் கண்காணிக்கப்பட்டும் வருகிறது.

    இந்த நிலையில், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கிரக பாதுகாப்பு குறித்த பணிகளை கண்காணிப்பதற்காக பிடிசிஓ என்று சொல்லப்படும் அதாவது கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் ஒன்றை நிறுவி, அதன் மூலமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியது.

    அந்த விண்கலமானது, பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய டிடிமோஸ் பைனரி என்ற சிறுகோளை கண்டுபிடித்தது. இந்த சிறுகோள் பூமி மீது மோதினால் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய அழிவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துக்கொண்டே இருந்தது. இதனால் அந்த சிறுகோள் பூமி மீது மோதாத வண்ணம் அதை திசை திருப்பும் முயற்சியில் நாசா இறங்கியது.

    அதற்காக டார்ட் (DART -Double Asteroid Redirection Test) என்ற செயல் திட்டத்தை தொடங்கி, தீவிரமாக அதற்கான வேலைகளை நாசா செய்து வந்தது. தற்போது அந்த பாறைகளால் பூமிக்கு ஏற்பட இருந்த மிகப்பெரிய அழிவை நாசா வெற்றிகரமாக தடுத்து தன் சாதனையை நிலைநிறுத்தியுள்ளது.

    அந்த வகையில் நாசாவால் ஏவப்பட்ட அந்த விண்கலம் பூமி மீது மோத வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்ட சிறுகோள் மீது இன்று வெற்றிகரமாக மோதப்பட்டது. இதன் மூலம் அந்த சிறுகோளின் பாதை பூமியில் இருந்து திசைதிருப்பப்பட்டுள்ளது. இதனால், அந்த சிறுகோளால் பூமிக்கும் ஏற்படவிருந்த ஆபத்து முறியடிக்கப்பட்டது.

    ஆம், இந்திய நேரப்படி பார்க்கும்போது இன்று அதிகாலை (செவ்வாய்க்கிழமை) 3:30 மணி முதல் 4:40 மணிக்குள் இந்த சோதனை முயற்சி நடத்தப்பட்டு, பூமி மீது மோத வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்ட சிறுகோள் மீது இன்று வெற்றிகரமாக விண்கலம் மோதப்பட்டு, சிறுகோளின் பாதை திசை திருப்பப்பட்டுள்ளது.

    உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த நிகழ்வு நாசாவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    இதுகுறித்து நாசாவின் தலைவர் பில் நெல்சன் கூறியதாவது:

    நமது சொந்த கிரகத்தை சிறுகோளில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பதை ஒரு நாள் இந்த பணி நமக்குக் கற்பித்துள்ளது. கிரக பாதுகாப்பு என்பது உலகளாவிய முயற்சி என்பதையும், நமது கிரகத்தை காப்பாற்றுவது மிகவும் சாத்தியம் என்பதையும் இதன் மூலம் நாங்கள் காட்டியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

    அதேபோல் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு இயற்பியல் ஆய்வகத்தின் மிஷன் மேலாளர்கள், தொலைநோக்கி அவதானிப்புகள் பூமியிலிருந்து 6.8 மீ மைல் தொலைவில் உள்ள டிமார்போஸ் என்ற சிறுகோளின் பாதையை மாற்றுவதற்கு போதுமான சக்தியைக் கொண்டிருந்ததா என்பதைக் காட்ட இரண்டு மாதங்கள் வரை ஆகலாம், எனினும் அந்த கோளின் பயண திசை விரைவில் மாறும் என்று கூறியிருக்கிறார்.

    இதையும் படிங்க : பரோட்டா சாப்பிட கூடாது என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? விவரம் உள்ளே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....