Monday, March 18, 2024
மேலும்
    Homeஅறிவியல்செவ்வாய் கிரகத்தில் வேற்று கிரகவாசிகளா? சந்தேகத்தை உருவாக்கும் நாசாவின் புகைப்படம்!

    செவ்வாய் கிரகத்தில் வேற்று கிரகவாசிகளா? சந்தேகத்தை உருவாக்கும் நாசாவின் புகைப்படம்!

    செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படம் ஒன்றை நாசா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் வேற்று கிரகவாசிகளின் கால்தடம் போல ஒன்று தெரிகிறது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா ? இல்லையா ? என்ற கேள்வி நீண்ட காலமாக ஒரு புரியாத புதிராகவே உள்ளது. வெளிப்படையான சாட்சிகள் என்று இதுவரை எதுவும் கிடைக்கவில்லை என்ற நிலையில், அவ்வப்போது வெளிவரும் புகைப்படங்கள் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்துகின்றன. அப்படிதான் ஒரு புகைப்படத்தை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. 

    செவ்வாய் கிரகத்தின் உளவுப்பாதையில் உள்ள உயர்-தெளிவு இமேஜிங் அறிவியல் பரிசோதனை முறையை பயன்படுத்தி விண்வெளி நிறுவனம் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளது. இந்த புகைப்படத்தை நாசா சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதில் இருந்து அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

    அந்த புகைப்படத்துக்கு கீழாக நாசா விண்வெளி நிறுவனம், இது செவ்வாய் கிரகத்தில் உள்ள பள்ளத்தை குறிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், இங்கு வரைபடம் ஒவ்வொரு பிக்சலுக்கும் 50 சென்டி மீட்டர் அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. அந்த புகைப்படத்துக்கு கீழே பெரும்பாலானோர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

    பார்ப்பதற்கு இது வேற்று கிரகவாசிகளின் கால்தடம் போலவே உள்ளது என்று ஒருவர் தன்னுடைய கருத்தை தெரிவித்து உள்ளார். மற்றொருவர் கடவுளுடைய அழகான படைப்பிற்கு அண்டசராசரம் ஒன்றும் விதிவிலக்கல்ல என்று குறிப்பிட்டுள்ளார். பார்ப்போரை வாயடைக்க வைக்கும் ஒன்று அந்த படத்தின் கீழே மற்றொருவர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். 

    இரண்டாவது பாறைப்படுகையில் ஒரு பள்ளம் ஓன்று அமைந்திருப்பதாகவும், அது ஒரு காற்றோட்டமான பள்ளம் என்றும் நாசா நிறுவனம் கூறியுள்ளது. முதலில் ஏர்ரி கிரேட்டர் செவ்வாய் கிரகத்திற்கான பூஜ்ஜிய தீர்க்க ரேகையை வரையறுத்தது. ஆனால், விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இன்னும் தெளிவான படங்களை பிடிக்கத் தொடங்கியதால் அவர்களுக்கு மேலும் துல்லியமான அளவீடு தேவைப்பட்டது. 

    அதனால், நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தற்பொழுது உள்ள அளவீடுகள் எதனையும் மாற்றாமல் ஏரி-0 என்று இந்த சிறிய பள்ளத்தை அதன் பிரைம் மெரிடியனாக நியமித்துள்ளது. இதனைப்பற்றிய அடுத்ததடுத்த அறிவிப்புகள் பின்வரும் காலங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....