Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்திரைத்துறையினரை கதிகலங்கச் செய்யும் ஆளுங்கட்சியின் நிறுவனங்கள்; அடக்குமுறை ஓயுமா?

    திரைத்துறையினரை கதிகலங்கச் செய்யும் ஆளுங்கட்சியின் நிறுவனங்கள்; அடக்குமுறை ஓயுமா?

    ஆளுங்கட்சியின் ஆதரவினால் பல இடங்களில் அதிகார துஷ்பிரயோகங்கள், மிரட்டல்கள் நடைபெற்று வருகின்றன. காவல்துறை, நகராட்சி அலுவலகங்கள், டெண்டர் அமைப்புகள என துஷ்பிரயோகங்களும், மிரட்டல்களும் நடைபெறும் துறைகளை நீட்டிக்கொண்டே செல்லலாம். இந்த வரிசையில் தற்போது திரைத்துறையும் இணைந்துள்ளது. 

    ஆளுங்கட்சியின் ஆதரவை மறைமுகமாக பெற்ற தயாரிப்பு நிறுவனங்கள் பல இருந்தாலும், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸூம், கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஆளும் திமுகவின் நேரடியான ஆதரவை பெற்றிருக்க கூடியவைகளாக திகழ்கின்றன.

    இந்த இரு தயாரிப்பு நிறுவனங்களும், திமுகவின் ஆதரவினைக் கொண்டு பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாகவே திரைத்துறையில் பெரிய வீரியமற்று இருந்த இரு நிறுவனங்களும் கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக, திரைத்துறையில் உச்ச வீரியத்துடன் களமிறங்கி வருகிறது. 

    திரைப்படங்களைத் தயாரிப்பதில் சன் பிக்சர்ஸ் நிறுவனமும், திரைப்படங்களை வெளியிடுவதில் ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸூம் வித்தை காட்டிவருகின்றன. சன் பிக்சர்ஸ் தமிழகத்தின் உச்ச கதாநாயகர்களின் கால்ஷீட்டுகளை தொடர்ந்து பெற்றுவருகிறது. பல தயாரிப்பு நிறுவனங்களும்  உச்ச கதாநாயகர்களின் கால்ஷீட்டுகளை பெற வருடக்கணக்காக காத்திருக்கும் நிலையில் சன் பிக்சர்ஸ் அவர்களின் கால்ஷீட்டை பெறும் விந்தைகள் என்னவென்று பலரும் வினாக்கள் எழுப்பி வருகின்றனர். 

    பத்து வருடங்களுக்கு முன்பு திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது, ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸூக்கும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் கால்ஷீட் தராத நடிகர்கள் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதும், அவர்களின் திரைப்படங்கள் வெளிவந்தபோது, பல்வேறு இடையூறுகள் அளிக்கப்பட்டதும் நம்மில் பலருக்கும் நினைவில் இருக்கும். 

    குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற ஒரு விழாவில் அஜித்குமாரை வலுக்கட்டாயப்படுத்தி வரவழைத்தனர். அங்கு வந்த அஜித்குமார் கட்டாயப்படுத்துவதை நிறுத்துமாறு கூறியிருப்பார். அதன்பிறகு, அஜித்குமார் அவர்களின் திரைப்படங்களுக்கு மறைமுக இடையூறுகள் வந்தன.

    இதேப்போல், அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் விஜய் பங்கேற்க, அதை எதிர்த்த திமுக அப்போது விஜய் அவர்களின் நடிப்பில் வெளிவந்த காவலன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட பல்வேறு இடையூறுகளை நிகழ்த்தின. மேலும், ரெட் ஜெயண்ட்ஸ் சார்பில் வெளிவந்த திரைப்படங்களை கட்டாயமாக திரையரங்குகளில் ஒளிபரப்ப செய்த விவகாரங்களும் பல அரங்கேறின. 

    மீண்டும், தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனமும், ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸூம் பல்வேறு மறைமுக அடக்குமுறைகளை கையாண்டு வருவதாக தெரிய வருகிறது. பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களை மறைமுகமாக மிரட்டி ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் அவர்களிடம் இருந்து திரைப்படங்களை பெற்று வெளியீட்டு வருகின்றன. அதேப்போல், சாட்டிலைட் உரிமைகளையும் கட்டாயப்படுத்தி பெறுவதாகவே தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. 

    தற்போது , சன் பிக்சர்ஸ் நிறுவனமும், ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸூம் இணைந்து பல திரையரங்குகளை மிரட்டி , பீஸ்ட் திரைப்படத்தை திரையிடச் சொல்லிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றன. பொதுமக்களின் எண்ண ஓட்டங்களும் அப்படியாகத்தான் இருக்கின்றன. 

    திரைத்துறையினர் இம்மாதிரியான அடக்குமுறைகள் எப்போது ஓயும் என்று எதிர்ப்பார்த்தபடியே இருப்பதாக புலப்படுகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....