Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ரஷ்யாவை தாக்க சதித்திட்டம்; உக்ரைன் வருகிறாரா அமெரிக்க அதிபர் ஜோ பைடன்?

    ரஷ்யாவை தாக்க சதித்திட்டம்; உக்ரைன் வருகிறாரா அமெரிக்க அதிபர் ஜோ பைடன்?

    உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. இதன் முக்கிய கட்டமாக கீவ் நகரின் மீது தாக்குதல் நடந்துள்ளது.

    நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவை எதிர்த்து பின்வாங்காமல் உக்ரைன் அரசும் போரிட்டு வருகிறது. இதனால் உக்ரைனில் இருந்து மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். உக்ரைன் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய முடியாதவாறு ரஷ்யா கருங்கடலில் தன்னுடைய போர்க்கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளது. 

    இதனால் உணவுப்பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பசி பட்டினியால் அவதிப்பட்டு வருகின்றனர். உலகின் கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்வதில் ரஷ்யாவுக்கு முக்கியமான பங்கு உள்ளது. ரஷ்யாவை கட்டுப்படுத்தும் எண்ணத்தில் மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதன் விளைவாக உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. 

    இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல நாடுகள் நாளுக்கு நாள் ரஷ்யாவுக்கு எதிரான தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கின்றன. இதனால் மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. சமீபத்தில் கூட பிரிட்டன் பிரதமர் ஜான் போரிஸ் உக்ரைன் நாட்டிற்கு சென்று பாதிக்கப்பட்ட இடங்களைத் தானே நேரில் சென்று பார்வையிட்டார். 

    சமீபத்தில் உக்ரைன் நாட்டின் கடற்கரை பகுதிகளில் குண்டு வீசி தாக்கி வந்த போர்க்கப்பல், வெடிபொருட்கள் வெடித்து சிதறியதால் கப்பல் வெடித்து சிதறியது. இதற்கு தாங்கள் அனுப்பிய ஏவுகணை தான் காரணம் என உக்ரைன் தரப்பில் கூறப்பட்டு இருந்தது. இதனை ரஷ்ய ராணுவம் முற்றிலுமாக மறுத்து இருந்தது. 

    இந்நிலையில் உக்ரைனின் கீவ் நகரின் பல இடங்களில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. பல இடங்களில் தாக்குதல் நடந்ததால் நகரின் பல பகுதிகளில் ஆம்புலன்ஸ் சத்தம் மட்டும் கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

    ரஷ்ய நாட்டுப்பகுதியில் உள்ள ப்ரைஸ்க் பகுதியில் குண்டுகளை வீச உக்ரைன் அரசு தன் ஹெலிகாப்டர்களை அனுப்பி வைத்துள்ளது. அந்த பகுதியில் உள்ள மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது. இதனை முற்றிலுமாக மறுத்துள்ள உக்ரைன் ராணுவம் தங்கள் மீது தவறாண எண்ணம் ஏற்பட ரஷ்யா இவ்வாறு செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. 

    அதே நேரத்தில் உக்ரைன் ராணுவ கிடங்கில் இருந்த கடுமையான ஆயதங்களை தாக்கி அழித்தது ரஷ்ய ராணுவம். மேலும், ரஷ்யாவில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டினாலோ அல்லது சதி செய்தாலோ கீவ் நகரின் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல் நடக்கும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. 

    இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, உக்ரைனில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....