Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்சி சிறப்பு முகாமில் தனது கணவரை சந்தித்த நளினி!

    திருச்சி சிறப்பு முகாமில் தனது கணவரை சந்தித்த நளினி!

    திருச்சி சிறப்பு முகாமில் உள்ள தனது கணவரை சந்தித்த நளினி கண்ணீருடன் சென்று நலம் விசாரித்தார். 

    முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி இன்று தனது கணவரை சந்திக்க திருச்சி சென்றார். அப்போது அவரது கணவர் உள்ளிட்ட நான்கு பேருக்கு எந்தவித வசதிகளும் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்ததோடு உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

    இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அந்த முகாமுக்கு நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்தார். மேலும் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகவும் உறுதியளித்தார். 

    அந்தசமயம் மாவட்ட ஆட்சியரிடம் பேசிய நளினி, தனது மகள் லண்டனில் இருப்பதாகவும், அதனால் தனது கணவர் முருகனை லண்டனுக்கு அனுப்பி வைக்குமாறும் கோரிக்கை வைத்தார். இதற்கு மாவட்ட ஆட்சியர், எழுத்து பூர்வமாக மனு தரும்படி கூறினார். 

    இதனால், நளினி மாவட்ட ஆட்சியரிடம் சென்று நாரில் மனு அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    வெளியே வந்த மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, சாந்தன், பயஸ், ஜெயக்குமார், முருகன் ஆகிய நால்வருக்கும் அணைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல அந்த நாட்டின் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். 

    மேலும் அவர், இவர்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ளவில்லை என்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வது உள்ளிட்ட சில வசதிகளை கேட்டதாக தெரிவித்த ஆட்சியர், நால்வரில் 3 பேர் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்ததாகவும் கூறினார். அதேபோல், முருகனுக்கு வழக்கு இருப்பதால் அவர் தற்போது செல்வதற்கு வாய்ப்பில்லை எனவும் குறிப்பிட்டார். 

    இதையும் படிங்க: தலைமைத்திறன் பயிற்சி முகாம்: புதுச்சேரி கூட்டுறவுத்துறை ஏற்பாடு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....