Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மியான்மரில் 5 பேருக்கு மரண தண்டனை- மரணம் எப்படி தண்டனையாகும்?

    மியான்மரில் 5 பேருக்கு மரண தண்டனை- மரணம் எப்படி தண்டனையாகும்?

    மியான்மரில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

    மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பயங்கரவாத செயல்களை தூண்டிவிட்ட புகாரில் 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

    மியான்மர் நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபியோ ஜெயா தாவ், சமூக ஆர்வலர் கோ ஜிம்மி, ஹலா மியோ ஆங் மற்றும் ஆங் துரா சாவ் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரையும் தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றியதாக மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது. 

    முன்னதாக, மியான்மரில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் தேசிய லீக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக மியான்மர் ராணுவம் குற்றம் சுமத்தியது.

    இதைத் தொடர்ந்து, தேசிய லீக் கட்சி பதவியேற்றதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த மியான்மர் நாட்டு ராணுவம், கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

    இந்தியாவில் மூன்று ஆண்டுகளில் 329 புலிகள் பலி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....