Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஜம்மு காஷ்மீரில் தொடரும் கொலை- மக்களை காக்குமா மத்திய அரசு?

    ஜம்மு காஷ்மீரில் தொடரும் கொலை- மக்களை காக்குமா மத்திய அரசு?

    ஜம்மு காஷ்மீரில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 28 புலம்பெயர் தொழிலாளர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுளனர் என்று மத்திய அமைச்சர் நித்யனந்த் ராய்  தெரிவித்துள்ளார்.
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
    இந்நிலையில் நாடாளுமன்ற உள்துறை இணை அமைச்சர் நித்யனந்த் ராய் பேசினார், அப்போது அவர் கூறியதாவது:
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் ஏற்பட்டு வந்த தாக்குதல்கள் சற்றே குறைந்துள்ளது.  2018 ஆம் ஆண்டு 417 ஆக இருந்த தாக்குதல்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு 229 ஆக குறைந்துள்ளது.
    ஆனால் “சில ஒடுக்கப்பட்ட சமுதாயம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பீகாரை சேர்ந்த 7 தொழிலாளர்கள் தாக்கப்பட்டது உள்பட 28 புலம்பெயர் தொழிலாளர்கள் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
    இந்த அரசு பயங்கரவாத செயலை தடுக்க இரவும் பகலும் பாதுகாப்பு வழங்கி வருவகிறது. இனி வரும் காலங்களில் இத்தகைய தாக்குதல்கள் குறைக்கப்படும்.
    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....