Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு50 முதல் 100 மீட்டர் வரை தாக்குதல் நடத்த திட்டமிட்ட முபின்: வீடியோ ஆதாரங்களுடன் வெளிவந்த...

    50 முதல் 100 மீட்டர் வரை தாக்குதல் நடத்த திட்டமிட்ட முபின்: வீடியோ ஆதாரங்களுடன் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

    கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள 100 மீட்டர் தூரம் வரையிலான இடத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட முபீன் குறித்த சிசிடிவி காட்சிகள் சிக்கியுள்ளன. 

    கோவை மாவட்டம், டவுன் ஹால் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி அதிகாலை அங்கிருந்த காரில் சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதமடைந்தது. அந்தக் காரில் இருந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞர் உடல் கருகி பலியானார். 

    இவரின் வீட்டில் சோதனை செய்த போது வெடிகுண்டு தயாரிக்க தேவையான 75 கிலோ வெட்டி பொருட்கள் சிக்கின. இந்த சம்பவத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    இதுகுறித்தனான விசாரணை தற்போது தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறை நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிய நிலையில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதையும் படிங்க: தொடங்கியது ‘வடகிழக்கு பருவமழை’: 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..! வானிலை ஆய்வு மையம்..

    இந்த வெடிவிபத்து, தாக்குதல் என்றும், தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் கையாளும் ஒற்றை ஓநாய் தாக்குதல் முறையை ஒத்திருப்பதும் தெரியவந்துள்ளது. 

    ஒற்றை ஓநாய் முறை என்பது தீவிரவாத அமைப்பின் துணையின்றி தனியாக சித்தாந்த கொள்கைகளுக்காக தாக்குதல் அண்டத்தும் முறை ஆகும். 

    இந்த ஒற்றை ஓநாய் தாக்குதல்கள் ஐஸ் இஸ்லாமிய அரசு, அல் கொய்தா ஆகிய அமைப்புகளின் சித்தாந்தத்தில் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது. 

    முபீனின் வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோனியம்மன் கோவில், கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள புலியகுளம் விநாயகர் கோயில் பகுதிகளை தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கான இடங்களாக தேர்ந்தெடுத்தது தெரியவந்துள்ளது.

    இதுவரை வழக்கில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆறு பேரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், முபின் தனது தாக்குதல் 50 முதல் 100 மீட்டர் சுற்றளவு கொண்ட ஒரு பகுதியை அழிக்க நினைத்தார் என்றும் தெரியவந்துள்ளது.

    கடந்த சனிக்கிழமை பிற்பகுதியில், முபின் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் – முகமது அசாருதீன் மற்றும் அப்சர் கான்  ஆகியோர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினிய பவுடர், சல்பர், கரி, ஆணிகள் மற்றும் இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட மூன்று ஸ்டீல் டிரம்களை காரில் வைத்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....