Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்"அதிக பணம் சம்பாதிப்பதற்காக நிறுவனத்தை வாங்கவில்லை": எலான் மஸ்க் விளக்கம்..!

    “அதிக பணம் சம்பாதிப்பதற்காக நிறுவனத்தை வாங்கவில்லை”: எலான் மஸ்க் விளக்கம்..!

    “மனிதகுலத்திற்கு உதவவே” ட்விட்டரை வாங்கியாதாக உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

    எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கப்போவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். இது தொடர்பாக நடந்த பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்க எலான் மஸ்க் ஒப்பந்தம் செய்தார்.

    இதையடுத்து ட்விட்டரை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கின. இந்த நிலையில் ட்விட்டரில் இருக்கும் போலி கணக்குகள் குறித்த தகவல்களை நிறுவனம் வழங்க மறுப்பதாக கூறி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் அறிவித்தார். 

    உடனே எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அக்டோபர் 28 ஆம் தேதிக்குள் (நேற்று) ஒப்பந்தத்தை இறுதிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டது. 

    இதையும் படிங்க: நாசா வெளியிட்ட ” சிரிக்கும் சூரியன் “…இதனால் ஏற்பட போகும் ஆபத்துகள் என்ன தெரியுமா?

    இதனிடையே எலான் மஸ்க் நேற்று முன்தினம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ட்விட்டர் தலைமையகத்துக்குள் நுழைந்தார். அப்போது அவர் கைக்கழுவ பயன்படுத்தப்படும் சிங்க் ஒற்றை கையில் எடுத்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.  இது தொடர்பான காணொளியையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

    தொடர்ந்து அவர், தலைமை அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் சிறுது நேரம் ஆலோசனை நடத்தினார். இதன் மூலம் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ஏற்றுக்கொண்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. 

    ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான  எலான் மஸ்க், சில மணி நேரங்களிலேயே அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் 4 பேரை பணி நீக்கம் செய்தார். அதற்கு முன்னதாக டெஸ்லா உரிமையாளர் ட்விட்டர் விளம்பரதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், அதிக பணம் சம்பாதிப்பதற்காக நிறுவனத்தை வாங்கவில்லை.“சமூக ஊடகங்கள் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரி எதிரொலியாக பிளவுபடும் பெரும் ஆபத்தின் மத்தியில் ‘மனிதகுலத்திற்கு உதவும்’ முயற்சியில் ட்விட்டரை வாங்கியதாக” தெரிவித்தார். 

    இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக அவர் எடுத்த முதற்கட்ட முடிவுகள், தலைமைச் செயல் அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல் மற்றும் தலைமைச் சட்ட அதிகாரி விஜயா காடே ஆகியோரை நீக்கியது ஆகும். தற்போது, ​​சட்ட வல்லுனர்கள் எலான் மஸ்கின் நிதிப் பொறுப்புகள், குறிப்பாக பணியாளர் இழப்பீடு மற்றும் வணிகத்திற்கான பணப்புழக்கத்தை பராமரிப்பது தொடர்பாக கவலை அளித்து உள்ளனர். 

    ட்விட்டர் நிறுவனம் தோராயமாக 7,500 பணியாளர்களுக்கு அந்த நிறுவனத்தின் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 100 மில்லியன் டாலர் அளிக்க வேண்டும். 

    பணிநீக்கம் மூன்று செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு எலான் மஸ்க் 200 மில்லியன் டாலருக்கும் அதிகமாக கொடுக்க வேண்டும். சுமார் ஒரு வருடம் கழித்து, மஸ்க் பராக் அகர்வாலை பணிநீக்கம் செய்திருக்கலாம் எனகருதப்படுகிறது. இருப்பினும், ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் உள்ள தவறு மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பணத்தைப் பெறுவார்களா? என்ற தெளிவான விளக்கம் இல்லை என்பதால் நீண்ட வழக்குகளைத் தொடுக்க காரணம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது மாநிலங்களின் பொறுப்பு- பிரதமர் மோடி கருத்து

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....