Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகுடிநீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு; அதிர்ச்சியில் மக்கள்

    குடிநீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு; அதிர்ச்சியில் மக்கள்

    மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு மிதப்பதை கண்டு வேங்கைவயல் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

    வேங்கைவயல் – இந்த கிராமம் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சியைச் சேர்ந்தது. 30-க்கும் அதிகமான தலித் குடியிருப்புகள் உள்ள கிராமம் இது. 

    இந்த கிராமத்தில் கடந்த சில நாள்களாக சிறார்கள் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சிறார்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். காய்ச்சல் குறித்த காரணம் என்னவென்று கேட்கையில்,  சிறார்கள் குடித்த தண்ணீரில் ஏதேனும் கலப்பு இருந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனால், சந்தேகமடைந்த மக்கள், இன்று தங்கள் குடியிருப்புக்குள் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் ஏறிநின்று பார்த்துள்ளனர். அதில், மனிதக் கழிவு மிதப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தத் தகவல் அக்கம்பக்கம் பரவியது. 

    இதைத்தொடர்ந்து, கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், ஊராட்சித் தலைவர் எம். பத்மா மற்றும் வெள்ளனூர் காவல்துறையினரும் அங்கு வந்து பார்வையிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து ஊராட்சித் தலைவர் எம். பத்மா அளித்த புகாரின்பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, தொட்டியிலிருந்த குடிநீர் முழுவதும் அகற்றப்பட்டு, தொட்டி கழுவப்பட்டு புதிதாக தண்ணீர் ஏற்றப்பட்டது.

    சிறார்கள் விளையாட்டாக செய்திருக்கலாம் என்ற தகவல்களை பலரும் முன்வைக்க, குடிநீர் தொட்டியின் மூடியை பெரியவர்களால் மட்டுமே திறக்க முடியும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் வேங்கைவயல் சுற்றியுள்ள கிராமத்து மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

    ‘வெடி பொருட்கள் வாங்கியது எப்படி?’ – கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் விசாரணை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....