Saturday, March 16, 2024
மேலும்
    Homeஅறிவியல்காணத்தவறாதீர்கள்.. 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றும் அதிசய நிகழ்வு!

    காணத்தவறாதீர்கள்.. 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றும் அதிசய நிகழ்வு!

    நம்மில் சிலர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, வெறும் 48 நாட்களுக்கு மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் தரும் காஞ்சிபுரம் அத்தி வரதரை கடந்த 2019-ஆம் ஆண்டில் பார்த்து இருக்க அதிகம் வாய்ப்புண்டு. 

    பலர் அத்தி வரதரைப்பற்றி கேள்விபட்டிருக்கலாம் அல்லது அடுத்த முறை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் இருக்கலாம். இப்படி பல ஆண்டுகளுக்கு நம்மை காத்திருக்க வைத்து, வாழ்வில் ஒரு முறை மட்டுமே காணக் கூடிய பல நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. 

    12 ஆண்டுகளுக்கு ஒருமுரை பூக்கும் குறிஞ்சி மலரிலிருந்து பல கோடி நட்சத்திரங்கள் ஜொலிக்கும் அண்டம் வரை…

    அப்படி நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒரு நிகழ்வு 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அதுதான் உண்மை அதுவும் பரந்த வானில்…

    அப்படி நம்மை போல சில மனிதர்களுக்கு இது ஆச்சரியமாகவும் சிலருக்கு சாதாரணமாகவும் தோன்ற வாய்ப்புகள் உண்டு. ஆனால், விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கும் அதிலும் குறிப்பாக ஆஸ்ட்ரோ புகைப்படம் எடுப்பவர்களுக்கு இது பேர் அதிசயம் ஆகும்.

    வானத்தில் அப்படி என்ன காட்சி தெரிய போகிறது? என்று கேட்டால்,,

    சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் தெரிய போகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால், இது அறிவியலாளர்களின் உண்மையும், நாம் கண்ணால் காணக் கூடிய அதிசயமும் கூட..

    அதாவது, இதுவரை இல்லாத அளவுக்கு இன்னும் சொல்லப்போனால் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி வானில் மிகப்பெரிய வடிவில் வியாழனைக் காணலாம்.

    இந்தப் பெரிய அதிசய நிகழ்வை வெறும் கண்களால் காண இயலுமா?

    இதை வெறும் கண்களால் காண இயலாது என்பது தான் முற்றிலும் உண்மை. காரணம், நமது பூமிக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையே உள்ள தூரம் என்பது மிகவும் அதிகம்.

    சரி அதை எப்படி பார்க்க முடியும்? அதற்கான வழி என்ன?

    உங்களிடம் ஒரு டெலஸ்க்கோப் இருந்தால், 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நெருங்கி வரும் வியாழன் கோளை உங்களால் காண முடியும். 

    வானியல் வல்லுனர்களின் கூற்றுப்படி, 4 இன்ச் அல்லது அதைவிட பெரிய டெலெஸ்கோப் மற்றும் க்ரீன் முதல் ப்ளூ ரேன்ஜிலான சில பில்டர்ஸ் இருந்தால் நிச்சயம் உங்களால் வெறும் கண்களால் காண முடியும்.  

    வாய்ப்பு இருந்தால்…

    உங்களுக்கு இந்த அதிசய நிகழ்வை காண வாய்ப்பு கிடைத்தால், வியாழன் கோளை சுற்றி வரும் 53 நிலவுகளில் ஏதேனும் ஒன்றைக் காணலாம். 

    ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மொத்தம் 79 நிலவுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலவுகளில் மிகப் பெரியது அயோ (Io), யூரோப்பா (Europa), கேனிமீட் (Ganymede) மற்றும் காலிஸ்டோ (Callisto) ஆகியவகை. இந்த அனைத்து நிலவுகளும் கலிலியன் செயற்கைகோள்கள் (Galilean Satellites) என்று அழைக்கப்படுகின்றன. 

    வியாழனை சுற்றுப்போடும் நாசா

    நாசா விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாசா கடந்த 2011 ஆம் ஆண்டு வியாழன் கோளை ஆய்வு செய்வதற்காக ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த ஜூனோ (Juno) விண்கலம் வியாழன் கோளின் வட்டப்பாதையில் சென்றைடைய கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆனது.

    இதனைத்தொடர்ந்து, கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி முதல் வியாழன் சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது ஜூனோ செயற்கை கோள். இது வியாழன் கோளை மட்டுமல்ல, அதன் நிலவுகளையும் ஆராய்ந்து வருகிறது. 

    இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.. நமது பூமிக்கும் வியாழன் கோளுக்குமான தூரம் எவ்வளவு என்று..

    உங்களுக்குள் ஒரு ஆர்வம் வந்திருக்குமே.. நிச்சயம் காணத் தவறாதீர்கள் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் வியாழனின் இந்த அதிசய நிகழ்வை…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....