Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஅறிவியல்இதோ மில்லியன் விண்வெளிப் பொருள்கள்…

    இதோ மில்லியன் விண்வெளிப் பொருள்கள்…

    விண்வெளி ஆராய்ச்சியில் இதுவரை கண்டிராத ஒரு மில்லியனுக்கும் அதிகமான பொருள்களை வானியலாளர்கள் கண்டுள்ளனர். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் புதிய பரிமானங்களைக் கொண்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    சர்வ தேச விஞ்ஞானிகள் குழுமத்துடன் இணைந்து இங்கிலாந்தில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் வானியல் மற்றும் வானியற்பியல் இதழில் இக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வில் 4 மில்லியனுக்கும் அதிகமான பொருள்களின் படங்களையும் பால் வெளி மண்டலத்தையும் தாண்டி பல பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள பொருள்களின் படத்தையும் இதுவரை மனிதர் காணாத  பலவற்றைத் தெளிவாகக் படம் எடுத்துப் பகிர்வதில்  எங்கள் குழு மிகவும் மகிழ்ச்சி அடைகிறது என அஸ்ட்ரோன் மற்றும் லைடன் பல்கலைக்கழகத்தின் வானவியலாளரான டிமோதி ஷிம்வெல் கூறுன்கின்றார்.  space objects

    விண்மீன் திரள்கள் எவ்வாறு உருவாகின்றன,  கருவளையம் ( black hole ) எப்படி உருவாகிறது என பல ஆராய்ச்சிகளை வானியலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுவரை எந்த தொலைநோக்கியிலும் பார்த்திராத நான்கு மில்லியனுக்கும் அதிகமான பொருள்கள் ரேடியோ அலை நீளம் ( radio frequency length ) மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

    தொலை தூரத்தில் விண்மீன் திரள்களில் மோதும் பொருள்கள் மற்றும் பால்வீதி அண்டத்தில் எறியும் பொருள்கள், மிகவும் வித்தியாசமான பொருள்கள் என அனைத்தையும் கண்காணித்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....